காணாமல் போன போலீஸ்!போலீஸ், மெடிக்கல் என சில துறைகளில் இவர் எதற்கு இந்த வேலைக்கு வந்தார் என பலருக்கும் டவுட் வரும்படி சோம்பேறிகள் சிலர் வேலையில் இருப்பார்கள். பஞ்சாப்பைச் சேர்ந்த பல்வீந்தர் சிங்குக்கு மேலே சொன்ன அஷ்டலட்சணங்களும் அப்படியே பொருந்தும். பில்லிபிட் பகுதியில் கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் பல்வீந்தர்சிங் 2001ம் ஆண்டு கான்ஸ்டபிளாக கம்பீரமாக சேர்ந்தார். பின் யாருக்கும் சொல்லாமல் ஒருநாள் லீவு எடுத்து தலைமறைவானார்.

திடீரென்று ஒருநாள் ‘அட நாம் கான்ஸ்டபிளாச்சே’ என ஞாபகம் வந்து ஸ்டேஷனுக்கு பணியாற்றச் சென்றார் பல்வீந்தர். லீவுக்கு சரியான ரீசன் சொல்லவில்லை என டிஸ்மிஸ் செய்திருக்கிறார் எஸ்.பி. கலாநிதி நைதானி. அப்படி எத்தனை நாட்கள் லீவு எடுத்துவிட்டார்? 15 ஆண்டுகளும் 217 நாட்களும் மட்டுமே!