விவாதத்தால் விரல் போச்சு!சண்டை என்று வந்தால் சட்டை கிழியாமல், உதடு பொத்தலாகாமல் இருக்குமா என்ன? ஹைப்பர் டென்ஷனில் சிலர் செய்யும் சில விஷயங்கள் படிக்க காமெடி என்றாலும், நிஜத்தில் டரியலாக தெறி. பீகார் விரல் மேட்டரும் அப்படித்தான். சப்ரா மாவட்டத்தில் போரிவ்லி பகுதியில் காய்கறிக்கடை நடத்தி வரும் உதய்குமார் சிங், இரவில் விரார் - தகானு மார்க்க ட்ரெயினில்தான் கேல்வா பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

அன்று ரயிலில் தன் கடையில் வேலை பார்க்கும் பிரதீப் சஹானி யைப் பார்த்து, ‘ஏன் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை’ என்று கேட்டிருக்கிறார். அப்போது பேச்சில் குறுக்கே புகுந்த பிரதீப் நண்பர் கேது சௌராசியா, உதய்குமாரின் கட்டைவிரலை கடித்து துப்பி எஸ்கேப்பானார். மயங்கிய உதய்குமாரை, ஹாஸ்பிடலில் பிற பயணிகள் சேர்த்திருக்கின்றனர். சௌராசியாவை போலீஸ் வலைவீசித் தேடி
வருகிறது.

- ரோனி