COFFEE TABLE



ஸ்கூபா பேபி

‘லிங்கா’ சோனாக்‌ஷி சின்ஹா, இனி ஸ்கூபா பேபி! ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்வதை ஹாபியாக வைத்திருக்கிறார் சோனாக்‌ஷி. லேட்டஸ்ட்டாக வெளிநாட்டுத் தீவு ஒன்றில் ஸ்கூபா சாகசம் செய்து மகிழ்ந்திருக்கிறார். அந்த அற்புத நிமிடங்களை மினி வீடியோவாக தன் இன்ஸ்டாவில் பதிவிட்டார். அந்தப் பதிவுக்குக் கிடைத்த லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் மூன்றரை லட்சம் வரும்!

சிங்கத்துக்கு சிறை

தென்னாப்பிரிக்காவின் தேசிய பூங்காவிலிருந்த சிங்கம் ஒன்று தப்பி ஓடிவிட்டது. ஒரு மாதம் கழிந்த பிறகும் சிங்கத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வாரம் ஒரு காட்டில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்த அந்த சிங்கத்தைச் சுற்றி வளைத்துப் பிடித்துவிட்டது பூங்கா நிர்வாகம்.

சிங்கத்தைப் பூங்காவுக்குக் கொண்டுசெல்லாமல் ஓர் இரவு முழுவதும் சிறைக்குள் அடைத்து வைத்திருந்தனர். அடுத்த நாளே பூங்காவில் கொண்டுபோய் விட்டுள்ளனர். உலகிலேயே சிங்கத்தை சிறையில் அடைத்தது இதுவே முதல் முறை!

இந்தியாவில் போலி மருந்துகள்

‘‘உலகளவில் இதுவரைக்கும் தரமற்ற, போலியான மருந்துகளால் 3 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர்...’’ என்ற அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது புதிய ஆய்வு ஒன்று. ‘‘மலேரியா, நிமோனியா போன்ற குழந்தைகளை அதிகமாகத் தாக்கும் நோய்களுக்குத்தான் இந்த போலியான மருந்துகள் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளன...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

‘‘இந்தியா போன்ற பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் நாடுகளில்தான் போலியான மருந்துகள் அதிகமாக புழங்குகின்றன...’’ என்று செக் வைக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவப் பத்திரிகை ஒன்று.

இன்ஸ்டா காதலி!

பூங்கொத்துகளைக் கண்டால் மகிழும் பூனம் பஜ்வாவிடம் புது மாற்றம் தெரிகிறது.  டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கமே வராமல் ஒதுங்கியிருந்தவருக்கு இன்ஸ்டாவில் இன்ட்ரஸ்ட் அதிகமாகியிருக்கிறது. அப்புறமென்ன... வேண்டுதல் போல தினமும் ஒரு போட்டோஷூட்டை ஷேர் செய்து லைக்குகளைக் குவித்துவருகிறார். சமீபத்தில் ப்யூர் ஒயிட் காஸ்ட்யூமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 65 ஆயிரம் லைக்குகளை அள்ளிவிட்டார் பூனம்.

4K ஸ்மார்ட் டி.வி

ஸ்மார்ட் டிவி சந்தையில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது ‘Vu’ நிறுவனம். சமீபத்தில் எல்இடி டிஸ்பிளே பேனலுடன் ‘4K ரெசல்யூசனி’ல் ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது ‘Vu’. 43 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான அளவில் இந்த டிவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன.
விலை ரூ.30,999- லிருந்து ஆரம்பிக்கிறது.

குங்குமம் டீம்