வெளிநாடுகளுக்கு ஃபேமிலி டூர் போகணுமா..? மாதத் தவணை செலுத்துங்க!



சாப்பாடு, உடை, நகைகள்...

என எல்லாவற்றிலும் பிடித்தவை பிடிக்காதவை என விருப்பு வெறுப்புகள் இருக்கலாம்.

ஆனால், பயணம், சுற்றுலா எனில் விருப்பு வெறுப்பு இன்றி எல்லோரும் ஓகே சொல்லவே தயாராக இருக்கிறார்கள். என்றாலும் இதற்கு ஆகும் செலவை நினைத்து மலைத்து பெருமூச்சு விடுபவர்களே அதிகம்.இந்நிலையில் ‘‘நடுத்தர மக்கள் டூர் செல்ல விரும்பினா குறைந்த செலவுல நாங்களே அவங்களுக்கு ஏற்பாடு செய்கிறோம்...’’ என்கிறார் ‘LA Alegria International Tours Pvt Ltd’ நிறுவனரான திருமுருகன்.

‘‘எங்க குறிக்கோள் நடுத்தர மக்கள்தான். குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா போகணும் என்கிற கனவு வெறும் கனவா மட்டுமே அவங்களுக்கு கரையக் கூடாது. தவிர ஒரே நேரத்துல ரூ.50 ஆயிரம் அல்லது ரூபாய் ஒரு லட்சம் எல்லாம் தயார் செய்யறதுனா அவங்களுக்கு முழி பிதுங்கிடும்.

இதைத் தீர்க்க நாங்க மாதத் தவணை திட்டத்தைக் கொண்டு வந்திருக்கோம். ரூ.2500 முதல் மாதத் தவணை செலுத்தி சுற்றுலா செல்லலாம். உள்நாட்டு சுற்றுலாக்களாக அந்தமான், கோவா, தில்லி, சிம்லா...  மற்றும் வெளிநாட்டு சுற்றுலாக்களாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை... நாடுகளுக்கு கூட்டிட்டு போறோம்.

இதில் ஏன் ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் எல்லாம் இல்லைனு உங்களுக்கு கேள்வி எழும். நடுத்தர மக்கள்தான் எங்க குறிக்கோள். ஆக, ஒரு சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரைனா நான்கு பேர் குடும்பத்துக்கு எவ்வளவு ஆகும்..? இதை நடுத்தர மக்களால தாங்க முடியுமா..? தவிர இதுக்கு மாதத் தவணை திட்டமும் அவ்வளவா சரிப்படாது...’’ என்ற திருமுருகன், சுமை இல்லாமல் மகிழ்ச்சியுடன் நடுத்தர மக்கள் சுற்றுலா கிளம்ப வேண்டும் என்பதே தன் நிறுவனத்தின் நோக்கம் என்கிறார்.  

‘‘மத்த நிறுவனங்கள் மாதிரி எங்ககிட்ட எந்தவிதமான மறைமுக கட்டணமும் கிடையாது. உதாரணத்துக்கு ஒரு நபர் தாய்லாந்து போய் வர மூன்று இரவுகள் நான்கு பகல்கள் ஆகும். இதுக்கான செலவு ரூ.32,500. இதுல பயணச் செலவு, தங்கும் அறைகள், மூன்று வேளை உணவு, டீ, சுற்றிப்பார்க்கனு எல்லாமே அடக்கம்.

தனியா நீங்க ஷாப்பிங் செய்யறது மட்டும்தான் உங்க செலவு. ஷாப்பிங் வேண்டாம்னு நினைச்சா உங்களுக்கு செலவே கிடையாது! இப்ப ஆகஸ்ட் மாசம் சுதந்திர தினத்தை ஒட்டி இருக்கிற சுற்றுலாவுக்கு புக்கிங் நடக்குது.

இதுல புக் செய்யறவங்களுக்கு தங்க நாணயத்தை அன்பளிப்பா தர்றோம். கூடவே முன்னாடி எங்க கூட டூர் வந்தவங்ககிட்ட எங்களைப் பத்தி கேட்கவும் வழிவகை செய்யறோம்...’’ என்ற திருமுருகன், விமான நிலையத்தையே பார்க்காத பல குடும்பங்கள் தன் நிறுவனம் வழியாக தேசம் தாண்டி பறந்திருக்கிறார்கள் என்கிறார் மகிழ்ச்சியுடன்!          

ஷாலினி நியூட்டன்