சிரிங்க பாஸ்



‘‘என்னது... மானேஜர் சீட்ல நீங்க உட்கார்ந்ததுக்கு மெமோ கொடுத்துட்டாங்களா..?’’
‘‘ஆமா... லேடி செக்ரட்ரி மடில உட்கார்ந்தேன்!’’

‘‘தலைவர் குடிச்சிருக்கார்னு எப்படி சொல்ற..?’’
‘‘ஜெயிச்ச பிறகும் தொகுதிக்கு வர்றாரே!’’

‘‘உன் புருஷன் ஏன் உட்கார்ந்துகிட்டே தூங்கறாரு..?’’
‘‘அவர் ஒர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கார்!’’

‘‘உங்களுக்கு இட்லி வேணுமா... தோசை வேணுமா..?’’
‘‘என்னால மாவு ஆட்ட முடியாது! உப்புமாவே பண்ணிடு!’’

‘‘இது மைனர் ஆபரேஷன்தான்... கவலைப்படாதீங்க...’’
‘‘இது மைனர் ஆபரேஷன்னு எமனுக்கு தெரியுமா டாக்டர்?!’’

‘‘எந்த விஷயத்துக்காக தலைவருக்கு சம்‘மன்’ வந்திருக்கு..?’’
‘‘செம்‘மண்’ கடத்தினதுக்காக!’’

‘‘உங்ககிட்ட வாங்கின விக்சரியா இல்ல...’’
‘‘ஏன்... என்ன பிரச்னை?’’
‘‘பொண்டாட்டி பேச்சுக்கு தலையாட்டும்போது கீழ விழுந்துடுது!’’