சிரிங்க பாஸ்





“இப்ப நீங்க தயாரிக்கற கதையை யாரும் சொந்தம் கொண்டாடி கோர்ட்டுக்கு போக முடியாதா..?’’
“ஆமா! தலைப்பே ‘என் கதை’ன்னு வைச்சுட்டேன்!”

“கார்த்திகை மாசம் பெண் குழந்தை பிறந்திருக்கு... என்ன பெயர் வைக்கலாம்?”
“‘அகல்’யான்னு வைக்கலாமே!”

“என் இரண்டு பாட்டிகளும் இரட்டைப் பிறவிகள்!”
“ஓ இரட்டைக் கிளவியா?”

‘‘மன்னா! நீங்கள் தருவதாகச் சொன்ன சன்மானத் தொகையில் பத்து பவுன் குறைகிறதே?’’
‘‘டிடிஎஸ் பிடித்திருக்கிறேன் புலவரே!’’

“பெண்பார்த்தபிறகு மாப்பிள்ளை ஏன் வாயே திறக்கலை?”
“பஜ்ஜிக்கு பதிலா கொழுக்கட்டை கொடுத்துட்டாங்களாம்!”

“மன்னருக்கு ஸ்போர்ட்ஸில்
ஆர்வம் இருப்பதில் தவறில்லை... அதற்காக பெண்களுடன் கபடி ஆட விரும்புவது எல்லாம் எந்த விதத்தில் நியாயம்?!’’

“அயிட்டம் சாங் நடிகை வீட்ல வருமான வரித்துறை அதிகாரிங்க போனாங்களே... என்ன ஆச்சு..?’’
‘‘அவங்க ஆடிட்டர் சொன்னதைக் கேட்டு ‘ஆடி’ட்டாங்க!’’