வீடு பூரா பூனைகள் இருக்கணும்!



உற்சாக ஊஞ்சலாக மினுமினுக்கிறார் நிவேதா பெத்துராஜ். இந்த நவம்பரில் பொண்ணுக்கு ஹேப்பி பர்த்டே. பிறந்த நாள் கிஃப்ட் போல, ‘சங்கத் தமிழன்’ ரிலீஸ் வருகிறது. டோலிவுட்டில் அல்லு அர்ஜுன் படம் தவிர இங்கே ‘ஜெகஜால கில்லாடி’, ‘பார்ட்டி’ என குஷியில் பளபளக்கிறார் நிவேதா. படங்கள்ல துறுதுறுனு இருக்கீங்க... ரியல் லைஃப்ல நீங்க எப்படி..?

ஸ்கூல் டேஸ்ல நிவேதாவை நீங்க பாத்தது இல்லையே... அந்த நிவேதா ட்ரிப்புள் இன்ட்டூ ட்ரிப்புள் துறுதுறுன்னு இருக்கற பொண்ணு.ஷார்ட்டா சொல்றதா இருந்தா வாலு பொண்ணு! யெஸ். நான் பத்தாவது படிக்கும்போது, கிளாஸ்ல என்னோட சேட்டைகள் தாங்காமல் ஸ்கூல்லேயே எனக்கு டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. அந்த இன்ஸிடென்ட் இன்னும் ஞாபகத்துல இருக்கு.


ஒரு பையன் என்னை ரொம்ப இரிட்டேட் பண்ணிட்டான்னு அவனை கிளாஸ்லேயே வச்சு அடிபின்னி எடுத்துட்டேன். அது பெரிய பிரச்னையாகி, ஹெட்மாஸ்டர் வரை நியூஸ் போயிடுச்சு.

அப்புறமென்ன? என் பேரன்ட்ஸை கூப்பிட்டு, என்னோட டிசியை வாங்கிக்க சொல்லிட்டாங்க. வீட்ல ரொம்ப ஃபீலாகி, ‘என்னம்மா இப்படி பண்ணிட்டீேயம்மா’னு பொலபொலனு அழுதுட்டாங்க. அதனால ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ரெண்டு வருஷமும் வால்தனங்களை கொஞ்சம் மூட்டைகட்டி வச்சு, சைலண்ட் கேர்ளா மாறியிருந்தேன்! நீங்க ஒரு pet lover ஆச்சே..?

யெஸ். யெஸ். பெட் அனிமல்ஸ் பத்தி என்னை பேசச் சொன்னா மணிக்கணக்கா பேசுவேன். துபாய்ல ரெண்டு பூனைக்குட்டிகள் வளர்த்திருக்கேன். அங்கிருந்து நான் சென்னை வந்த புதுசுல ஒரு பூனைக்குட்டி வாங்கினேன். ஈசிஆர் ரோட்டுல ஷூட் போற வழியில ஒரு பெட் ஷாப்ல அந்த பூனைக்குட்டியை பாத்தேன். பொசுபொசுனு ப்யூர் வொயிட்ல அழகான பந்து மாதிரி சுருண்டு இருந்தது. அது Persian cat வகையைச் சேர்ந்தது.

அதேமாதிரி பூனையை துபாய்ல வளர்த்திருக்கேன். அதனால அதுக்கு என்ன பிடிக்கும், எப்படி நடந்துக்கும்னு எல்லாம் எனக்கு தெரியும். அப்ப சென்னையில நான் இருந்த தெருவுக்கு பெயர் முருகன் ஸ்ட்ரீட். ஸோ, அந்த பூனைக்குட்டிக்கு நண்டு முருகன்னு பெயர் வச்சிட்டேன்!
நண்டுவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என்னோட அதிகம் ட்ராவல் பண்ணின பூனை அதான். எதிர்காலத்தில் நிறைய பூனைகள் வளர்க்க விரும்புறேன். என் மடியில் ஆரம்பிச்சு, வீட்ல எந்தப் பக்கம் திரும்பினாலும் பூனைகளா இருக்கற மாதிரி அவ்ளோ பூனைகள் வளர்க்கணும்னு நினைக்கறேன். பாக்கலாம்!

இப்ப நீங்க மதுரை பொண்ணா, துபாய் பொண்ணா..?
ரெண்டும்தான்! மதுரையில்தான் பிறந்தேன். அடுத்து தூத்துக்குடியில் கொஞ்ச வருஷம் இருந்திருக்கேன். அதன்பிறகே அப்பா அம்மா துபாய் போனாங்க. இன்னமும் அவங்க துபாயில்தான் இருக்காங்க. ஷூட்டிங் இருந்தால் சென்னையில் இருப்பேன். ஆனாலும் மூணு மாசத்துக்கு ஒரு தடவ ஃப்ளைட்ல துபாய் பறந்திடுவேன். இல்லேனா, என்னைத் தேடி அவங்க இங்கே வந்திடுவாங்க.

மதுரையிலேயும் என் உறவினர்கள் இருக்காங்க. அந்தப்பக்கம் ஷூட்டிங் போகும்போது அவங்களையும் சந்திச்சு ஒரு ஹாய் சொல்லிட்டு வருவேன்.
படப்பிடிப்பு இல்லாத நாட்கள்ல மாசத்துக்கு ஒருமுறை நிச்சயம் அங்கே போயிடுவேன். ஏன்னா துபாயில் என்னோட ஃப்ரெண்ட்ஸ், கார்னு மனசுக்கு பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கு.

உங்க dream boy எப்படிப்பட்டவரா இருக்கணும்?
கொஞ்சம் கண்டிஷன்ஸ் இருக்கு. டைம் கிடைக்கும் போது நோட் பண்ணிக்குங்க. சிம்பிளா சொல்லணும்னா... அவர் மேன்லியா... ரசனையானவரா இருக்கணும். எனக்கு பழைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும். என்னோட ப்ளே லிஸ்ட்ல அவ்ளோ ஸாங்ஸ் இருக்கு. பளிச்னு மிரட்டாத, அதே டைம்ல அறையை அம்சமா அழகாக்குற லைட்டிங்ஸ் பிடிக்கும். ஹாட் சாக்லேட்ஸ் பிடிக்கும்.

இதெல்லாம் தெரிஞ்சு வச்சு, எனக்காக எனக்கு பிடிச்ச ஸாங்ஸ் ப்ளே பண்ண தெரிஞ்சிருக்கணும். கலகலனு நல்லா பேசத் தெரிஞ்சவனா இருக்கறது முக்கியம். ஒண்ணுமே பேசாதவங்க வேணாம். பேசுறேன்னுட்டு என்னை வர்ணிக்கறவரா இருக்கக்கூடாது. அது பிடிக்காது.

சிம்பிளா மேன்லியா, விஜய் மாதிரி இருக்கணும். எங்க வீட்டுல எல்லாருமே விஜய் சாரோட வெறித்தனமான ஃபேன்ஸ். அவர் படம் ரிலீஸ் ஆனால் எல்லாருமே ஃபேமிலியா போய் பார்ப்போம். என் வீட்டு கண்ணாடியில எல்லாம் விஜய் சார் படங்கள்தான் ஒட்டி வச்சிருக்கேன்!

மை.பாரதிராஜா