சீயானோடு ஜோடி போடும் அனுஷ்கா!‘சிங்க’த்துக்கு அடுத்து சிம்புவோட ‘வான’த்தில ஜோடி போடற அனுஷ்காவுக்கு அடுத்த தமிழ்ப்படம் விக்ரம்கூட. விஜய் டைரக்ஷன்ல அவர் நடிக்கப்போற படத்துக்குப் பலரைக்கேட்டு சரிப்படாத நிலையில, அனுஷ்க் ஓகே ஆகியிருக்கு. சியர்ஸ் ச்சீயான்..!
லிங்குசாமி டைரக்ஷன்ல நடிக்கிற படத்தை அடுத்து ஆர்யா, மிஷ்கின் டைரக்ஷன்ல ஒரு படமும், பாலாஜி சக்திவேல் டைரக்ஷன்ல ஒரு படமும் மீண்டும் ராஜேஷ் டைரக்ஷன்ல ஒரு படமும் நடிக்க விருக்கார். டைரக்டர்களோட நண்பேன்டா..!

பாலாவோட ‘அவன் இவன்’ல ரீமாவுக்கு நடிக்க அழைப்பு போக, மூணே மூணு சீன்னாலும் சந்தோஷத்தோட ஒத்துக்கிச்சாம் ரீம்ஸ். அவன் இவன் அவள்..! ‘யுத்தம் செய்’ல நடிச்சுட்டு, ‘முரண்’ல நடிச்சுக்கிட்டிருக்க சேரன், அடுத்தும் ஹீரோவா நடிக்கிற திட்டத்திலதான் இருக்காராம். அதுக்காக பாலுமகேந்திராவோட அசிஸ்டன்ட் ராஜாகிட்ட கதை கேட்டு வச்சிருக்கார். சீக்கிரமே அறிவிப்பு வரலாம்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ல சிம்புகூடவே வந்த கணேஷ் நடிப்பு பாராட்டப்பட்டதால, இப்ப ‘வானம்’, ‘போடா போடி’, ‘வேட்டை மன்னன்’னு வரிசையா சிம்பு கூட நடிக்கிறார். ஜெய்... கணேஷ்..! இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கு தமிழ்ல ரஜினி, விக்ரம், சூர்யாகூட நடிக்க ஆசையாம். விஜய், அஜித் நடிச்ச படங்களைப் பாக்கலியோ பொண்ணு..? மல்லிகா ஷெராவத் அஞ்சு மொழிகள்ல நடிக்கிற ‘ஸ்...ஸ்...ஸ்’ தமிழ் தலைப்பைக் கேட்டு பயந்துடாதீங்க. அதில மல்லிகா பாம்பா வர்றதால அந்த சவுண்டை தலைப்புல வச்சிருக்காங்க. மேக்ஸிமம் கிளாமர் உள்ள படம்ங்கிறதால பிவேர் ஆஃப் மல்லிகா..!

‘எந்திரன்’ வெளியான மூணு நாளைக்குள்ள படத்தை மூணு தடவை பார்த்துட்டாராம் தனுஷ். ஆனா ‘எந்திரன்’ தலைப்புல நடிக்க இன்னும் பத்து வருஷம் காத்திருக்கணுமே மாப்பிள்ளை..? ராம்கோபால் வர்மாவோட இந்தி ‘அப்தக் சப்பனை’ தமிழ்ல ரீமேக் பண்ணி நடிக்கப்போற ஆர்.கே., அதுக்கான தலைப்பைக் கமல்கிட்ட கேட்டு வாங்கி வச்சிருக்கார். அது ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு...’ - கோலிவுட் கோயிந்து
கோர்ட்டுக்கு வந்துட்ட ஆட்டநாயகனோட மனைவி, கணவனைத் தவிர எந்த செட்டில்மென்ட்டுக்கும் தயாரா இல்லையாம். அதனால தன் வழி தனி வழியா அரசியல்ரீதியான உதவிகள் கேட்கற முயற்சிகள்ல இறங்கியிருக்காராம்  மிஸ்டர் ஆட்டம். அடங்க மாட்டார் போலிருக்கே..?

ரெண்டெழுத்துப் பறவை படத்தில நடிச்சிருக்க மூணெழுத்து நடிகைக்கு நல்ல பேர் கிடைக்கும்ங்கிற நிலையில, ‘சமவெளி’ல நடிச்சு இருக்கிற பேரைக் கெடுத்துக்க, பறவை டைரக்டருக்கு ஏகக் கோபமாம். அதனாலேயே பறவை பட விழாக்கள்ல கலந்துக்க வேண்டாம்னு பொண்ணுகிட்ட கண்டிப்பாவே சொல்லிட்டாராம். ஒரு மைனா மைனா குருவி...