ஒல்லி வீடு!படத்தில் நீங்கள் பார்ப்பது வீட்டின் முன்பக்க சுவர் அல்ல. 1,122 சதுர அடியில், இரண்டு படுக்கையறைகளுடன் கட்டப்பட்ட முழுமையான வீடு!

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ளது டீர்ஃபீல்டு என்ற கிராமம். அங்கே அமைந்துள்ள இந்த வீடு உள்ளூர் மக்களிடையே வெகு பிரபலம். ‘ஸ்லிம் ஹவுஸ்’ என்று சொன்னாலே போதும், டீர்ஃபீல்டில் உள்ள குழந்தைக்குக் கூட தெரியும். இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது ஸ்லிம் ஹவுஸ். இதன் விலை சுமார் ரூ.2 கோடி.

வீட்டு புரோக்கர் ஒருவர் ஸ்லிம் ஹவுஸை வீடியோ எடுத்து டுவிட்டரில் தட்டிவிட, வைரலாகிவிட்டது.  ‘இந்த வீட்டுக்குள் எப்படி வசிக்க முடியும்’ என்பதே ஆயிரக்கணக்கானோரின் கமெண்ட். ஆனால், வீடியோவில் காட்டப்படும் வீட்டின் உட்புறம் வசிப்பதற்கு ஏற்றதாகத்தான் இருக்கிறது. ஏசி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பர்னிச்சர்களை எல்லாம் வீட்டுக்குள் எப்படி கொண்டு போனார்கள்?!