ஆஸ்கரை வென்ற தென்னிந்தியா!



அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு...’ பாடல் விருதை வென்றுள்ளது. இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு ஆஸ்கர் விருதை வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கீரவாணிஅதேபோல் யானைகளை பராமரிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முதுமலை தம்பதி குறித்த இந்தியாவின் ‘The elephant whisperers’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது!

‘த எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவை பொம்மா - பெல்லி என்ற தம்பதியினர் பராமரிக்கின்றனர். யானைக்கும் இந்த தம்பதிக்குமான பாசப் பிணைப்பையும் உறவையும் கூடவே சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலையும் இந்த ஆவணப் படம் உயிரோட்டத்துடன் பதிவு செய்துள்ளது. இந்த டாக்குமெண்ட்ரியை ‘நெட்பிளிக்சில்’ காணலாம்.

நிரஞ்சனா