27 வருடங்களாக லீவு போடாத ஊழியர்!உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் ஒரு உணவு நிறுவனம், ‘பர்கர் கிங்’. இந்நிறுவனத்தின் ஊழியரான கெவின் ஃபோர்டைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்தவர் கெவின் ஃபோர்டு. சரியாக 27 வருடங்களுக்கு முன்பு அவரது ஊரிலிருந்த ‘பர்கர் கிங்’ உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் கெவின்.
அன்றிலிருந்து அவர் ஓய்வு பெறும் வரை ஒரு நாள் கூட அவர் விடுப்பு எடுக்கவில்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட நாள் தவறாமல் வேலைக்குச் சென்றிருக்கிறார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யும்போது அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். சிங்கிள் தந்தையாக குழந்தைகளை வளர்த்திருக்கிறார்.

வேலைக்குச் செல்லும்போது குழந்தைகளைப் பாதுகாப்பு விடுதியில் விட்டுவிடுவார். குழந்தைகளைக் கவனிப்பதற்காகவே இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். எந்தச் சூழலிலும் அவர் வேலைக்குச் செல்வதை விடவில்லை. கடந்த வாரம் ஓய்வு பெற்றிருக்கிறார் கெவின். ஓய்வு பெறும் வரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் இருந்த கெவினைப் பாராட்டி இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது ‘பர்கர் கிங்’.

த.சக்திவேல்