பாவெல் துரோவ்!
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், ஃபிரான்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதுதான் ஹாட் நியூஸ்.டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியதே இதற்குக் காரணமாம். டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் 900 மில்லியன் பயனர்கள் - அதாவது 90 கோடி மக்கள் - பயன்படுத்தி வருகின்றனர். டெலிகிராம் செயலியை அதிகம் பயன்படுத்தும் பயனர்களின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. ஃபிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல், இணையவழி குற்றங்களுக்கு டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் 39 வயதான பாவெல் துரோவ், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாசப் பதிவுகள் டெலிகிராம் செயலி மூலம் பகிரப்படுவதற்கு ஆதரவாக இருந்ததாக ஃபிரான்ஸ் அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம், உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ரஷ்யரான பாவெல் துரோவ், ஐரோப்பிய நாட்டு குடிமகனாக மாற விரும்பியிருக்கிறார். இப்போதைய போர்ச் சூழலில் இந்த ‘குடி உரிமை மாறுதல்’ சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.
என்.ஆனந்தி
|