ஆஹா அஸ்வின்!
சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி, பங்களாதேஷ் அணியை 280 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றது. இதில் ஆட்டநாயகன் விருது பெற்ற அஸ்வின் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். முதலாவதாக ஒரே மைதானத்தில் சதம் மற்றும் 5 விக்கெட்களை இருமுறை வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்குமுன் 2021ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இதே சேப்பாக்கத்தில் சதம் மற்றும் 5 விக்கெட் எடுத்திருந்தார். அடுத்ததாக 37வது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால், அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷேன் வார்னேவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார் அஸ்வின்.
அதுமட்டுமல்ல; அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் வால்ஸை பின்னுக்குத் தள்ளி 522 விக்கெட்டுகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறினார். இதுதவிர, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்துவிதப் போட்டிகளிலும் மொத்தமாக 750 விக்கெட்டுகள் வீழ்த்திய 4வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார் அஸ்வின். இதில் முத்தையா முரளிதரன், வார்னே, கும்ப்ளே ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
பி.கே.
|