நியுஸ்வே

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் தன்னை இணைத்து கிசுகிசு வந்ததும் கடுப்பாகி விட்டார் சுரேஷ் ரெய்னா. ‘‘ஒரு நடிகையையோ, மாடலையோ நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அப்படிப்பட்ட பெண்களை எங்கள் குடும்பத்தில் விரும்ப மாட்டார்கள்’’ என அவசரப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து பெண்ணிய அமைப்புகளின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
‘ரிஹானா கொஞ்சம் குண்டாகிவிட்டார்’ என அவரது அப்பா ரொனால்டு ஃபென்டி ஒரு பேட்டியில் யதேச்சையாக சொல்லி வைக்க, டென்ஷனான ரிஹானா தனது டாப்லெஸ் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு, ‘‘நான் அதே ஸ்லிம் பொண்ணுதான். பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார்.
ஹாங்காங் டிஸ்னிலேண்டில் படம் பிடிக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமை சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்துக்கு! அடுத்து சிம்பு நடிக்க இருக்கும் ‘வாலு’ படத்தின் ஷூட்டிங்கும் அங்குதான் நடக்கிறது. எனவே இரண்டாவது பெருமையும் சிம்புவுக்கே!
மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்று நடிகையான டயானா ஹைடன் புத்தகம் எழுதியிருக்கிறார். ‘எ பியூட்டிஃபுல் ட்ரூத்’ என்ற இந்தப் புத்தகம், பெண்கள் தங்களை எப்படி அழகாகக் காட்டிக்கொள்வது என்பதற்கான கைடு! உள்ளாடை முதல் யோகா வரை எல்லாம் விவரிக்கும் இந்தப் புத்தகத்தை டயானா இரண்டரை வருஷம் எழுதினாராம். ‘‘அழகிகளுக்கும் நடிகைகளுக்கும் மட்டுமில்லை... சாதாரண பெண்களுக்கும் இது அவசியம்’’ என்கிறார் அவர்.
நேபாள தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டாலும் மனிஷா கொய்ராலா அதிகம் இருப்பது மும்பையில்தான். ரீ என்ட்ரியில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வராததால், சின்னதாக ஐஸ்கிரீம் பார்லர் திறக்கக் கூப்பிட்டால் கூட போகிறார். இப்போதைக்கு நடிப்பது ஒரே ஒரு மலையாளப் படத்தில்!
|