ஒரிஜினல் பேய் ஸ்பாட்!



திக் திக் டிமான்டி காலனி

இப்பவும் ஆழ்வார்பேட்டையில் இருக்கு இந்த டிமான்டி காலனி.  பேய் வீடு, பேய் பங்களா மாதிரி, இது பேய் ஏரியா. சிட்டி நடுவுல ஒரு த்ரில் திகில் ஸ்பாட். இன்னிக்கு நேத்து இல்ல... பிரிட்டிஷ் காலத்திலேயே இங்கே பேய் பீதி கிளம்பிடுச்சு. வீடுகள்ல கதவுகள் தானாவே திறந்து மூடும். வீட்டுக்குள்ள இருந்து விசித்திரமான ஒலிகள் கேட்கும்.

அங்கே தங்க முயற்சி பண்ணின ஒருத்தர் இறந்து போயிருக்கார்!’’ - திகில் இன்ட்ரோவால் திணறடிக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.அஜய்ஞானமுத்து. ஏ.ஆர்.முருகதாஸின் சீடர். அருள்நிதி நடிக்கும் `டிமான்டி காலனி’யை கட்டி எழுப்பிக் காத்திருப்பவர்.
``ரொம்ப பயமுறுத்துறீங்களே..?’’

``யெஸ்! இது கற்பனையான திகில் பங்களா இல்ல. கண் முன்னாடி இருக்குற உண்மை ஸ்பாட். அதனால பயமும் படபடப்பும் ஒரு டோஸ் கூட இருக்கும். இந்தப் படத்துக்காக டிமான்டி காலனி மாதிரியே பாழடைந்த ஒரு ஏரியாவை ஆர்ட் டைரக்டர் சந்தானம் செய்து கொடுத்தார். அந்த செட்டுக்குள்ள தனியா போகவே எல்லாரும் பயந்தாங்க. ஸ்கிரீன்ல அந்த ஃபீலை நீங்களும் நிச்சயம் உணர்வீங்க.

 அருள்நிதி, `சூது கவ்வும்’ ரமேஷ் திலக், சனத், அபிஷேக், சிங்கம்புலி, மதுமிதா தவிர பின்லாந்துல இருந்து வந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தரும் நடிக்கறார். படத்தோட இரண்டாம் பகுதியில் மொத்தமே 2 சீன்கள்தான்... படு வித்தியாசமா பின்னியெடுக்கும். சந்தோஷ்சிவன் அசிஸ்டென்ட் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு. `அரிமா நம்பி’ பண்ணின புவன் னிவாசன் எடிட்டிங்னு ெபரிய டீமே அமைஞ்சிருக்கு! மோகனா மூவிஸும், தேனாண்டாள் பிலிம்ஸும் இணைந்து தயாரிச்சிருக்காங்க!’’`‘அருள்நிதி இப்போ அடுத்த கட்டத்துக்கு வந்துட்டாரே!’’

``ஆமாம். `மௌனகுரு’வில் அருள்நிதி சாரோட பர்ஃபார்மென்ஸ் பாத்து அசந்துட்டேன். சும்மா மிரட்டியிருப்பார். இந்தக் கதைக்கு அவர் சரியா இருப்பார்னு தோணுச்சு. ஆனால் இதில் லுக், ஹேர் எல்லாத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கார். டான்ஸ்லயும் பின்னியிருக்கார். ஒரு சாங்குக்காக ரெண்டு வாரம் ரிகர்சல் எடுத்து ஹார்டு வொர்க் பண்ணியிருக்கார்!’’``உங்க குரு முருகதாஸ் என்ன சொல்றார்?’’

``சார் இன்னும் படம் பார்க்கல. நான் அவர்கிட்ட உதவியாளரா சேருவதற்கு முன்னாடி குறும்படங்கள் நிறைய பண்ணியிருக்கேன். `நாளைய இயக்குநர்’ல கார்த்திக் சுப்புராஜ் செட் நான். என்னோட சொந்த ஊர் பெங்களூரு. சென்னை லயோலாவில விஸ்காம். என் ஷார்ட் ஃபிலிம் பார்த்துட்டுதான் முருகதாஸ் சார் சேர்த்துக்கிட்டார். `ஏழாம் அறிவு’, `துப்பாக்கி’ன்னு ரெண்டு படங்கள்ல அவர்கிட்ட வொர்க் பண்ணினேன்.

அசிஸ்டென்ட்களோட உட்கார்ந்து ஸ்டோரி டிஷ்கஸன் பண்றப்பல்லாம், ஒவ்வொரு சீன்லயும் நூறு சதவீதம் நம்பிக்கை வந்த பிறகுதான் அதை விட்டு வெளியே வருவார். `துப்பாக்கி’ ஸ்கிரிப்ட் வொர்க் அப்போ, ஒரு சீன் அசிஸ்டென்ட்ஸ் சிலருக்குப் பிடிக்கல. `இந்த சீனை மாத்தச் சொல்லாதீங்க.

இது அப்படியே இருக்கட்டும்’னு சொல்லிட்டார். படம் வந்த பிறகு அந்த சீனுக்குதான் தியேட்டர்ல கிளாஸ் அள்ளுச்சு. ஆடியன்ஸை புரிஞ்சு வச்சிருக்கறதாலதான் அவர் மாஸ் டைரக்டரா இருக்கார்!’’

``திகில் படத்துல கூட பாட்டு, டான்ஸ்னு கலக்குறீங்களே...?’’``ஆமா. 3 பாடல்கள். 2 தீம் மியூசிக் இருக்கு. கேபா ஜெரோமியான்னு புதியவர் இசை. ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட லீடிங் கிடாரிஸ்டா இருந்தவர். மதன்கார்க்கி மூலமா இவர் எனக்கு அறிமுகமானார். அறிமுக இசைன்னாலும் ‘அடடா’ன்னு சொல்ல வச்சிருக்கார்.’’

``ஹீரோயின் பத்தி எங்கேயும் சொல்ல மாட்டேங்கறீங்களே..?’’``காமெடி படத்திலேயே ஹீரோயின் இருப்பாங்க. ஹாரர்ல இல்லாமலா? ஹீரோயின் இதில் ஷாக் சர்ப்ரைஸா வரப் போறாங்க. யாருன்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!’’

- மை.பாரதிராஜா