Like and Share



அண்ணே ஒரு விளம்பரம்...

சென்ஸார் போர்டில் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, இதற்கு ‘யூ’ சர்ட்டிபிகேட் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார்கள். குழுவில் ஒருவர் மட்டும், ‘‘இந்தப் படத்தில் நியூடிட்டி இருக்கு, ‘ஏ’ சர்ட்டிபிகேட்தான் கொடுக்கணும்’’ என்கிறார். ‘‘இது குடும்பக்கதை... இதில் எங்கே நியூடிட்டியைப் பார்த்தீங்க?’’ எனக் கேட்கிறார்கள் மற்றவர்கள்.

 ‘‘குறைந்தபட்சம் ஏழு சீன்லயாவது ஹீரோ டாப்லெஸ்ஸா வர்றாரே... பொண்ணு பண்ணினா அது நியூட்... பையன் பண்ணினா மட்டும் டியூட். என்ன சார் நியாயம்?’’ என்கிறார் அவர். ‘காலம் மாறுகிறது காற்றும் மாறுகிறது’ என்ற டேக்லைனோடு வரும் ஹேவல்ஸ் விளம்பரத்தில் புதுமை இணைப்பு இது.

அப்பா‘டெக்’கர்

இந்தியாவின் மொபைல் நெட்வொர்க்குகளின் நிலை பற்றி எரிக்சன் இந்தியா நிறுவனம் 15 ஆயிரம் குடும்பங்களிடம் சென்று கள ஆய்வு செய்தது. அதன் முடிவில், இங்கே 63 சதவீதம் பேர் செல்போனில் நெட்வொர்க்கே கிடைக்காமல் கடுப்ஸ் ஆகிறார்கள் எனத் தெரிய வந்திருக்கிறது. அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் மற்ற முக்கிய தகவல்கள்...செல்போன் பயன்பாட்டாளர்களில் மூன்றில் ஒருவர் ஸ்மார்ட் போன் உபயோகிக்கிறார்ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் ஐந்து பேரில் மூவர், 3ஜி இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள்.

இணைய இணைப்பு பாதியில் நிற்பது, இணையப் பக்கங்கள் லோட் ஆகாமல் போவது போன்ற பிரச்னைகள் 48 சதவீதம் பேரை எரிச்சல்படுத்தியுள்ளன.
அதே 48 சதவீதம் பேர், ‘‘2ஜிக்கும் 3ஜிக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை’’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

யூத் டியூப்

‘ப்ராங்க்பாஸ்’ எனும் யூ டியூப் சேனல் டீம் செய்த குறும்பு எக்ஸ்ப்ரிமென்ட் இது. நடுவழியில் நின்று போன ஒரு காருக்குள் தலையை விட்டுக் கொண்டு ஒரு பையன் அரை மணி நேரம் படுத்திருக்கிறான். அவனை என்ன என்று கூட இந்தச் சமூகம் கேட்கவில்லை. இதுவே ஒரு பெண்ணாக இருந்தால்..? என்ற ஐடியா தலை தட்டுகிறது. அந்தப் பையனையே மேக்கப் போட்டு, ஸ்லீவ்லெஸ் கவுன் மாட்டி செக்ஸி லேடி ஆக்குகிறார்கள்.

இப்போதும் அதே ரோடு... அதே கார்... ஏதோ ரிப்பேர் செய்வது போல அந்தப் ‘பெண்’ காருக்குள் தலையை விட்டுப் படுத்ததுதான். அடுத்த நிமிஷமே அந்தப் பக்கம் போகும் வாகனங்கள் பம்முகின்றன. ‘‘என்னாச்சு... என்னாச்சு...’’ எனக் கேட்டு ஆளாளுக்கு கூட்டம் போடுகிறார்கள். இளைஞர் கூட்டம் ஒன்று அதை வீடியோ எடுக்கிறது. ‘‘உதவி வேணுமா மேடம்?’’ என்று இருவர் கேட்டே கேட்டு விடுகிறார்கள். ‘‘டேய், நீங்கல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்கடா போனீங்க?’’ என்ற கேள்வியை நம்மிடம் விட்டுவிட்டு சைலன்ட்டாக கருத்து சொல்லாமல் முடிகிறது இந்த வீடியோ. இதைப் பார்த்து நரநர ஆனவர்கள் 16 லட்சத்து 78 ஆயிரம் பேர்!

வாட்ஸப் Wow..!!

உலகின் மிகப்பெரிய டாக்ஸி நிறுவனம் உபெர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு வாகனம்கூட இல்லை.
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனம் அமுல். இந்நிறுவனம் ஒரு பசுவைக்கூட வளர்க்கவில்லை.
உலகின் புகழ்பெற்ற மீடியா ஃபேஸ்புக். அவர்கள் ஒரு கட்டுரையைக்கூட சொந்தமாக உருவாக்குவதில்லை.
உலகின் மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனம் அலிபாபா. அவர்கள் எந்தப் பொருளையும் தயாரிப்பது இல்லை.
தினமும் 300 கோடி செய்திகள் பரிமாறப்படும் வாட்ஸ்அப் தளத்துக்கு சொந்த சர்வர் கிடையாது.
உலகமே மாறிக்கொண்டிருக்கிறது. மதிப்பு மிகுந்த சொத்துக்களை உருவாக்குங்கள். கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் மட்டுமே சொத்துக்கள் அல்ல!