| கவிதைக்காரர்கள் வீதி 
 
 
*வெடித்து வாழ வைக்கிறதுதன்னை செய்தவர்களை
 பட்டாசு!
 
  *குழந்தைகளின் முகங்களில்
 மகிழ்ச்சியின் ஒளியைக்காண
 வருடம்தோறும்
 சுற்றுலா வருகிறது
 தீபாவளி!
 *குட்டி ஜப்பானுக்கும்
 சீனாவுக்கும் இடையே
 பட்டாசு விற்பனைப் போர்!
 
 *இனிப்பகங்களில்
 வியாபாரப் போட்டிகள்
 முதியோர் இல்லங்களில்
 கைமணம் முடக்கப்பட்ட
 பாட்டிகள்!
 
 *உறவுச் சங்கிலியில்
 ஏறும் துருவை நீக்கி
 வர்ணங்களைப் பூசிவிட்டு
 விடைபெறுகிறது
 தீபாவளி!
 
 *எப்படிக் கொண்டாடுவது
 என்ற வழி தெரியா
 கவலையில் உள்ள
 ஏழைக்கும்
 எப்படிக் கொண்டாடுவது
 
 என்ற புதுவிதமான முறையை
 தேடும் குழப்பத்தில் இருக்கும்
 பணக்காரனுக்கும்
 ஒரே நாளில்தான்
 வருகிறது தீபாவளி!
 
 
 வீ.விஷ்ணுகுமார்
 
 
 |