தித்திக்கும் தீபாவளி ஷாப்பிங்
போத்தீஸ்

போத்தீஸில் இந்த ஆண்டு ஹாட் தீபாவளி அறிமுகம், 3 இன் 1 பல்லு டிசைன் ரகப் புடவைகள்! ஹாஃப் அண்ட் ஹாஃப் டிசைன் புடவையான இவற்றை, எந்த கலர் ப்ளவுஸுக்கும் பொருந்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.

இதன் விலை ரூ.4,500ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனுடன் வந்திருக்கும் லைக்ரா ஷிம்மர், பாகல்பூர் சில்க், சந்தேரி ஜக்கார்ட் பட்டு, நெட் பட்டோலா ஃபேன்ஸி போன்ற சேலை ரகங்கள் அனைத்துமே கொள்ளை அழகு! இதுதவிர, ஆண்களுக்கு சைனீஸ் காலர் டைப் மேண்டரின் ஷர்ட்களும், மோடி ஜாக்கெட் ஷெர்வானியும் கலக்குகின்றன. இளம் பெண்களுக்கு ஃப்ளோரல் பிரின்ட், வெல்வெட் ெலஹங்கா செட், பலாஸ்ஸோ சுடி ஆகியவை மற்றொரு பியூட்டி!

ஆரெம்கேவி

தீபாவளி புது வரவில், வர்ணஜாலப் புடவைகளால் மாயாஜாலம் காட்டுகிறது ஆரெம்கேவி சில்க்ஸ்! ‘இக்கத் வர்ணஜாலம்’, ‘கலம்காரி வர்ணஜாலம்’, ‘லினோ வர்ணஜாலம்’ போன்ற புடவைகள் அற்புத ரகங்கள்! இதனுடன் ‘நிகா’ புடவை, டிசைனில் அசத்துகிறது. இவை, ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டூடியோவில் கைதேர்ந்த ெநசவாளர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகள். இது தவிர ஆண்களையும், குழந்தைகளையும் குதூகலப்படுத்தும் விதவித அயிட்டங்கள் நிறையவே ஜொலிக்கின்றன.

தி சென்னை சில்க்ஸ்

மனதுக்குப் பிடித்த கலர்ஃபுல் சாய்ஸாக சந்தோஷப்படுத்துகிறது தி சென்னை சில்க்ஸ்! ‘காஞ்சி செமி டிரான்ஸ்பேரன்ட் சில்க் சாரீஸ்’, ‘லினன் சில்க் சாரீஸ்’, ‘காக்ரி லாங் நெட்டட் சாரீஸ்’ என புதுசாய் மின்னும் புடவை ரகங்கள் அத்தனையும் நச்! கூடவே, பெண்களுக்கான பனாரஸி பேட்டர்ன் சுடிதார்கள் கண்ணைப் பறிக்கின்றன. ஆண்களுக்கு ஸ்லிம் ஃபிட் ஷர்ட்டுகள், காட்டன் பேன்ட்கள், இண்டோ - வெஸ்டர்ன் சூட்கள், ஷெர்வானி என விதவித வெரைட்டிகளில் உற்சாகம் கூட்டுகிறார்கள் இவர்கள்.

NAC

கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கும்படி தங்கள் தீபாவளியின் புது வரவை வடிவமைத்திருக்கிறார்கள் என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ்! விதவித கலெக்‌ஷன்கள், வண்ண வண்ண டிசைன்கள், வெரைட்டியான மாடல்கள் எனத் தங்க நகைகள் அனைத்தும் தகதகக்கின்றன. இதில், சவரனுக்கு ரூ.500 வரை தள்ளுபடி ஆஃபரும் தருகிறார்கள்.

சுந்தரி சில்க்ஸ்

பாரம்பரிய புடவைகளுக்குப் பெயர் போன சுந்தரி சில்க்ஸ் ‘மத்தாப்பு கலெக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் புது வரவுகளைக் கொண்டாடுகிறது! தீபாவளிக்காகவே தயாரிக்கப்பட்ட சதுர்முகி கலெக்‌ஷனில் ப்ளவுஸ், பல்லு, பார்டர், புடவை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலரில் அழகு சேர்க்கின்றன.

நான்கு வண்ணங்களுமே அத்தனை ராயல்! இந்தப் பட்டுப் புடவையின் விலை 7 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை. இதனுடன், சுந்தரி ஸ்பெஷல் தயாரிப்பு சுடிதார்களும் சல்வார்களும் அம்சமாய் மிளர்கின்றன. கூடவே, வித்தியாச காட்டன்களில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆண்களுக்கான குர்தீஸ்கள் ரிச் லுக்கில் மின்னுகின்றன.

சாரதாஸ்

திருச்சி சாரதாஸின் தீபாவளி வரவுகள் பிரமிக்க வைப்பவை! எந்த ஆரவாரமும், வார்த்தை ஜாலங்களும் இல்லாமல் பிரத்யேஹாஸ் பட்டு கலெக்‌ஷனை குவித்திருக்கிறது இந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்!

குவாலிட்டியில் அதிக கவனம் செலுத்தும் சாரதாஸின் இந்த அறிமுகமும் தனித்துவமாக மனதைக் கவர்கிறது; அதுவும் ஆச்சரியமளிக்கும் விலையில்! கூடவே, இளம் பெண்களுக்கும், ஆண்களுக்கும், குழந்தைகளுக்குமான வெரைட்டி  ஐட்டங்களுக்குப் போடலாம் எக்கச்சக்க லைக்ஸ்!

மயிலை  குமரன்

மயிலை குமரனின் இந்த வருட தீபாவளி வரவு, அனன்யா பட்டு கலெக்‌ஷன்ஸ்! ‘தூய பட்டு, மலிவான விலை’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு பளிச்சென களம் இறங்கியிருக்கிறார்கள். பாரம்பரியத்தை ஃபேஷனோடு இணைத்து இழைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கலெக்‌ஷனிலும் அப்படியொரு வெரைட்டி வடிவமைப்பு! விலை 4,500 ரூபாயில் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை!

ரதி சில்க்ஸ்

குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகளின் ஸ்பெஷலிஸ்ட் என்றால் சேலம் ரதி சில்க்ஸ்தான்! தூய ரெடிமேட் பட்டுப் பாவாடைகளை முதன்முதலில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்கள். இந்த தீபாவளி வரவாக குட்டி ‘லெஹங்கா’ வகை டிரஸ்களை பல்வேறு டிசைன்களில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

 டிசைன்களில் புதுமை என்றாலும் மெட்டீரியல்களில் பாரம்பரியம் மாறாதிருக்கிறது. விலை 2,500 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை! இதுதவிர பேபி ஆப்தரி, பேபி சாரீஸ், ரதி ராணி 2 இன் 1, ரதி ராணி என குழந்தைகளின் உலகமாக மிளிர்கிறார்கள் இவர்கள். இதனுடன் டிஷ்யூ சாரியும், பரதநாட்டிய டிரஸ்ஸும் சூப்பர்!

ராம்ராஜ்

வெள்ளை சட்டை என்றாலே ராம்ராஜ் வொயிட் எனப் பெயரெடுத்த நிறுவனம் இப்போது ஸ்டைலாக ஒரு சாதனை செய்திருக்கிறது. ஆண்களுக்கான கூல், கலர்ஃபுல் லினன் ஷர்ட்டுகள் ராம்ராஜின் லேட்டஸ்ட் ஹாட். ஐரோப்பிய லினன் வகை மெட்டீரியலில் இயற்கையோடு இயைந்து இழைக்கப்பட்ட சட்டைகள் இவை. பார்வைக்கும் டிரெண்டியாக பல வண்ணங்களில் பரிமளிக்கின்றன இந்தப் புதுமை ஷர்ட்டுகள்!

தொகுப்பு: பி.கே