‘‘அட, இவனுக்கு வேற வேலை இல்லப்பா... எப்பவும் யாரையாச்சும் கலாய்ச்சுட்டேதான் இருப்பான்னு கூடச் சொல்வாங்க. சொல்லிட்டுப் போகட்டும். நாம பண்றது காமெடி. அதுல போய் சீரியசா யாரையாச்சும் புண்படுத்தணும்னு நினைப்போமா?’’ என்கிற விவேக், ‘வெடி’ படத்தில் கையில் எடுத்திருப்பது ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்பு கமலையும் அவரது ஒருதலைக் காதலையும்.
‘‘பிரபுதேவா கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். அப்ப அவரைப் பத்தி நானும், என்னைப் பத்தி அவரும் தெரிஞ்சிக்கிட்டது கம்மிதான். பிறகு அவர் இயக்குன படங்களை நல்லாவே ரசிச்சேன். அப்பத்தான் எங்கிருந்தோ காதுல வந்து விழுந்துச்சு, ‘டைரக்டரா அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்’னு. ‘வெடி’க்காக அவர் எங்கிட்ட பேசுனப்ப, அந்த ‘ஸ்ட்ரிக்ட் பேர்வழி’ நினைப்பு மனசுக்குள்ளயே இருக்க, ‘அவர் சொல்றதைச் செய்துட்டுப் போயிட வேண்டியதுதான்’னு முடிவு பண்ணிட்டேன்.
ஷூட்டிங் ஆரம்பிச்சது. ஃபீல்டுல பார்த்தா மனுஷன் அவ்ளோ கலகலப்பா இருக்கார். ஆளு நம்ம டைப்தான்னு தெரிஞ்ச பிறகு சும்மா இருக்க முடியுமா? அதனால ஒண்ணாவது வகுப்புல ‘சார்’னு ஒரு விரலைக் காட்டி எந்திரிக்கிற பையன் மாதிரியே அவர்கிட்டப் பேசி உள்ள

கொண்டு வந்த விஷயம்தான் அப்புவும் அவரது காதலும்’’ என்கிற ‘ஜனங்களின் கலைஞ’னுக்கு படத்தில் விஷால் பேராசிரியராக இருக்கும் கல்லூரியில் ஜிம் மாஸ்டர் ரோல். ஜிம்முக்கு வரும் சமீரா ரெட்டியிடம் ‘ஜம்’முனு சிக்ஸ்பேக் காட்டுகிறார்.
‘‘அப்பு மாதிரி இருந்தா ரிங் மாஸ்டராத்தானே ஆக முடியும்; எப்படி ஜிம் மாஸ்டர்’னு நீங்க கேக்கறது புரியுது’’ என்றவர் அதுபற்றித் தொடர்கிறார்...
‘‘முதல்ல ‘சிக்ஸ் பேக்’னு பிரபுதேவா சொன்னதுமே லேசா உதறுச்சு. ஏன்னா, அப்ப நாலஞ்சு நாளா சின்னதா பேக் பெயின்ல இருந்தேன். சிக்ஸ் பேக் செட்டப்புக்கு ரெடியாகறதுக்கே ஆறு மணி நேரமாச்சு. பக்காவா ரெடியாகி ஸ்பாட்டுக்கு வந்தா, பேசணும்னே அவசியமில்லாம போயிடுச்சு. மாணவர்கள் மத்தியில நடந்த ஷூட்டிங்ல, வந்து நின்னாலே ஆர்ப்பரிச்சாங்க பசங்க. எப்படி ‘தூள்’ல ‘யா... இட்ஸ் மீ’ன்னு ரீமாவைக் கவர பில்டப் பண்ணுவேனோ, அதே மாதிரி இதுல
சமீரா ரெட்டியை பிக்கப் பண்ண முயற்சி செய்யறதுதான் முழுநேர வேலை. ஒரு சீன்ல சமீரா முன்னால விஷாலை வெயிட் தூக்கச் சொல்லி ஏக பில்டப் பண்ணி ட்டிருக்கிற போது, ‘மாஸ்டர்... ஒரு வாட்டி பண்ணிக் காட்டுங்களேன்’னு கோலை நம்ம பக்கம் போட்டுடுவார்.
அப்பத்தான் ஜிம் மாஸ்டர், ரிங் மாஸ்டரான அப்பு மாதிரி ஆயிடுவார். அதை ஸ்க்ரீன்ல பார்க்கும்போது நிச்சயமா நீங்க வெடிச் சிரிப்புச் சிரிப்பீங்க. ஆனா பின்னணியில அந்த இதமான ‘உன்ன நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்’ போயிட்டிருக்கும்!’’
‘குள்ளமாக கமல் நடித்தபோதே அதுபற்றி அறிய நிறைய ஆவல். நீங்களாச்சும் சொல்லலாமே அந்த சஸ்பென்ஸை’ என்றால், ‘‘மூத்தோர் சொல் கேக்கணுமில்லையா... அவங்க என்ன பதில் சொன்னாங்களோ அதே பதில்தான் எங்கிட்ட இருந்தும்!’’ என்கிறார்.