ஹாலிவுட் கஜினி



Untitled Document



சூர்யாவின் வெற்றி இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிடத்தக்கவர். அவர் 'கஜினி'யில் காட்டிய ஸ்டைலிஷான சஞ்சய் ராமசாமியை என்றும் மறக்க முடியாது. 'கஜினி' மூலம் பாலிவுட்டில் கவனிக்கப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ், 'ஏழாம் அறிவு' மூலம் ஹாலிவுட்டுக்கும் சென்றால் நமக்குப் பெருமைதான்.
- மகேஸ்வரன், சாத்தூர்.


ரஜினியின் வாழ்க்கையை அவர் புத்தகமாக எழுதினால்கூட விற்பனை பிய்த்துக்கொண்டு போகும். இன்னொருவர் & அதிலும் அவர் சாதித்த தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட்காரர் & படமாக்கும்போது அது பெரிய வரவேற்பைப் பெறுமா என்பது சந்தேகம்தான்!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

 
லாபம் ஈட்டும் துறையாக ரயில்வே செயல்படுகிறது. பெருகும் ரயில் விபத்துக்களின் எண்ணிக்கையைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கு தவறு நடக்கிறது?
 
- ஆர்.ராஜதுரை, சீர்காழி.


'மங்காத்தா' மூலம் அறிமுகமாகியிருக்கும் பாரதியார் வாரிசு நிரஞ்சன் பாரதி பற்றி, 'மரபணுவில் பதிந்திருந்தது காலத்தால் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது' என்றுதான் சொல்ல வேண்டும்!
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை.


'அமெரிக்க டிவி நடிகை ஈவா மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்காக சைகை மொழி படிக்கிறார்' என்ற சேதி நெகிழ்ச்சி. நம்மூர் நடிகைகள் ரசிகர்களுக்கென ஏதாச்சும் மெனக்கெடுகிறார்களா என்ன?
- கோ.சாந்தகுமாரி, சேலம்.


பத்து & பத்து & பத்துக்கு என்ன செய்தோம் என பத்து பிரபலங்கள் கெத்தாக சொன்னவை அனைத்தும் முத்து!
- கோ.சாந்தகுமாரி, சேலம்.


துறைசார் நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட விளக்கங்களை அளிக்கும் 'கேள்வி&பதில்' பகுதி பலருக்கும் பயன் அளிக்கிறது.
- ஜோதிமணி, மதுரை.


கலைக்கு எல்லை இல்லை என்பதால், இந்தித் திரையுலகம் தமிழகத்து நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணுவை வரவேற்பதிலும் ஆச்சரியமில்லை. அரபிக்கடல் காற்றில் தமிழைக் கலக்கட்டும் சின்னப்பொண்ணு!
- துரைராஜ், காருகுறிச்சி.


கவிதைக்காரர்கள் வீதி'யின் அனைத்துக் கவிதைகளும் கவிப்பிரியர்களுக்கு அறுசுவை விருந்து!
 
- முரளி, கள்ளக்குறிச்சி.


'எத்தனை நோயாளிகளைக் குணப்படுத்தி அனுப்பியிருக்கிறோம்' என்பது முக்கியமில்லாமல் 'எவ்வளவு நோயாளிகள் தங்களிடம் வருகிறார்கள்' என்பதே சில மருத்துவர்களின் எண்ணம்.
 
- பூங்கோதை, விழுப்புரம்.


'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'ங்கிறது சரியாத்தான் இருக்கு. கடைசி பக்கக் கதை ஒருபக்கமாக இருந்தாலும் அதன் கருத்து எங்களுக்கு பல புத்தகங்கள் படித்த அனுபவத்தைத் தருகின்றது.
-இராம.கண்ணன், திருநெல்வேலி.


எங்க அபிமான இலக்கியவாதிகள் 'என்ன செய்துக்கிட்டிருக்காங்க' என்று 'இலக்கியம் இதோ... இதோ...'வில் தெரிந்துகொள்ள முடிந்தது.
 
-கந்தசாமி, திருச்செந்தூர்.