முக்கியத்துவம் மிக்க மூலக்கூறு உயிரியல் படிப்பு




உயிரினங்களின் உணவூட்டம், வளர்ச்சி, ஜீரணம், நோய், இனப்பெருக்கம் மற்றும் ஏனைய இன்றியமையாத நிகழ்வுகளை மூலக்கூறு அளவில் படித்தறிய உதவும் அறிவியலின் ஒரு பிரிவே ‘மூலக்கூறு உயிரியல்’  (Molecular biology) ஆகும். இவ்வுலகில் முதலில் தோன்றிய வேதிய மூலக்கூறு எது? எந்த வகையான வேதிய மூலக்கூறுகள் ஒன்றிணைந்து முதல் உயிரி தோன்றியது? என்பன உள்ளிட்ட இன்றியமையாத வினாக்களுக்கு விடையளிக்கும் வல்லமை வாய்ந்த துறைகளுள் மூலக்கூறு உயிரியல் துறையும் ஒன்று. இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், இத்துறையில் சாதித்த  சாதனையாளர்கள், இத்துறை மாணவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.



‘‘உயிரினங்கள் எண்ணிலடங்காத மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. அவை எவ்வாறு உண்டாகின்றன, அவற்றை சிதைக்க உதவும் நொதிகள் (Enzyme) என்னென்ன? என்பன போன்ற பல கேள்விகளை அறிந்துகொள்ள பேருதவியாக உள்ள துறை, மூலக்கூறு உயிரியல். மிக எளிய மூலக்கூறுகள் ஒன்றிணைந்து ஓர் எளிய வாழ்க்கை முறை கொண்ட, ஒரு செல் உயிரி உண்டாயிற்று. அதன்பிறகு பல்வேறு சிக்கலான வாழ்க்கை முறைகளைக் கொண்ட பல செல் உயிரிகள், இரு வாழ்விகள், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் மற்றும் தாவரங்கள் ஆகியவை தோன்றின.

உயிரினங்களின் வாழ்வில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படை காரணமாக விளங்குவது தன்மயமாகும் திறன் பெற்ற உயிரியல் மூலக்கூறுகளே. இதை ஆராய்ந்து, மனிதர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் பல நோய்களுக்கு மருந்துகளைக் கண்டறியலாம். இதற்கு உதவும் இத்துறை வளமான எதிர்கால வாய்ப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கிறது. எனவே, தாராளமாக மாணவர்கள் இத்துறையைத் தேர்வு செய்யலாம்.

மூலக்கூறு உயிரியல் துறை சார்ந்த பிரிவுகள்/ படிப்புகள்

Developmental Bilogy உயிரித் தோற்றவியல்
Population Genetics உயிரினக்கூட்ட மரபியல்
Biophysics  உயிரி இயற்பியல்
Grystallography படிகவியல்
Gene Therapy ஜீன் தெரபி
Molecular cell biology மூலக்கூறு  செல் உயிரியல்
Molecular Medicine மூலக்கூறு மருந்தியல்
Molecular Microbiology மூலக்கூறு நுண்ணுயிரியல்
Molecular Ecology மூலக்கூறு சூழ்நிலையியல்
Molecular Modelling    மூலக்கூறு மாதிரியாக்கவியல்
Ultrastractural Biology நுண்ணமைப்பு உயிரியல்இப்பிரிவுகளில் படிக்கலாம்

B.Sc., M.Sc., M.Phil., Ph.D., D.Phil., D.Sc., B.S., M.S. மூலக்கூறு உயிரியல் துறையைக் கொண்ட இந்தியாவிலுள்ள சிறந்த  கல்வி நிறுவனங்கள்

சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிக்குலர் பயாலஜி, ஐதராபாத்
சிவாஜி யுனிவர்சிட்டி, குவாலியர்
திஸ்பூர் யுனிவர்சிட்டி, திஸ்பூர்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை
நியூ சயின்ஸ் காலேஜ், ஐதராபாத்
ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச், பெங்களூரு
இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லி, டெல்லி
சி.சி.எஸ். ஹரியானா அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டி, ஹரியானா

உலக அளவில் மூலக்கூறு உயிரியல் துறையைக் கொண்ட சிறந்த கல்வி

யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் லண்டன், இங்கிலாந்து (www.uel.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் லிங்கன், இங்கிலாந்து (www.lincoln.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட்மின்ஸ்டர், இங்கிலாந்து   (www.westminster.ac.uk)
பிரின்ஸ்டான் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.princeton.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் வெர்மோண்ட், அமெரிக்கா (www.uvm.edu)
பெர்க்லி யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.berkeley.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் கூயெல்ப், கனடா (www.uoguelph.ca)
கார்னெல் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.cornell.edu)
ஸ்டோனிப்ரூக் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.stonybrook.edu)
ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி, அமெரிக்கா   (www.jhu.edu  )

மூலக்கூறு உயிரியல் துறையில் ஆய்வுசெய்து புகழ்பெற்ற இந்திய வல்லுநர்கள் சிலர்...

பேராசிரியர் லால்ஜி சிங்
பேராசிரியர் ஒபெய்த் சித்திக்
பேராசிரியர் அனில் க்ரோவர்
பேராசிரியர் எம்.மதன்பாபு
பேராசிரியர் வி.சந்திரா
பேராசிரியர் சி.எம்.எஸ்.தாஸ்
பேராசிரியர் எஸ்.ஆர்.வி.ராவ்
பேராசிரியர் ஆர்.என்.கபில்
பேராசிரியர் எம்.ஆர்.விஜயராகவன்
பேராசிரியர் டி.எம்.சக்ஸேனா.

மூலக்கூறு உயிரியல் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற வல்லுநர்கள் சிலர்...

பேராசிரியர் போன்னி பேஸ்லர்
பேராசிரியர் கரோல் க்ரீடர்
பேராசிரியர் கிறிஸ்டோபர் செட்சங்கா
பேராசிரியர் டேவிட் ஹில்லிஸ்
பேராசிரியர் கார்லஸ் ஓயெஸ்
பேராசிரியர் டென்னிஸ் ப்ரே
பேராசிரியர் வார்ரன் வீவர்
பேராசிரியர் ஜார்ஜ் பீடில்
பேராசிரியர் எட்வர்ட் டாட்டம்
பேராசிரியர் ஆஸ்வால்ட் ஏவெரி

ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும், ஆய்வாளர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தரவும் உலக அளவில் செயல்படும் குழுக்கள்/அமைப்புகள் சில...

அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோ பயாலஜி, அமெரிக்கா
அமெரிக்கன் சொசைட்டி ஃபார் செல் பயாலஜி, அமெரிக்கா
தி அமெரிக்கன் சொசைட்டி  ஃபார் பயோ கெமிஸ்ட்ரி அண்ட் மாலிக்குலர் பயாலஜி, அமெரிக்கா
கனடியன் சொசைட்டி ஃபார் செல் அண்ட் மாலிக்குலர் பயாலஜி, கனடா
ஆஸ்திரேலியன் சொசைட்டி ஃபார் பயோ கெமிஸ்ட்ரி அண்ட் மாலிக்குலர் பயாலஜி, ஆஸ்திரேலியா
நைஜீரியன் சொசைட்டி ஃபார் பயோ கெமிஸ்ட்ரி அண்ட் மாலிக்குலர் பயாலஜி, நைஜீரியா
தி மலேசியன் சொசைட்டி ஃபார் பயோ கெமிஸ்ட்ரி அண்ட் மாலிக்குலர் பயாலஜி, மலேசியா
இண்டியன் சொசைட்டி ஆஃப் செல் பயாலஜி, இந்தியா
பிரிட்டிஷ் சொசைட்டி  ஃபார் செல் பயாலஜி, இங்கிலாந்து
இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஃபார் செல் பயாலஜி, அமெரிக்கா

மூலக்கூறு உயிரியல் துறையில் சாதிக்கும் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள்

லியோனார்ட் சிம்கின் மெமோரியல் ப்ரைஸ், இங்கிலாந்து
ஸேவன் - டேவிட்சன் ப்ரைஸ், இங்கிலாந்து
நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் அவார்டு, அமெரிக்கா
லியூவென்ஹாக் மெடல், இங்கிலாந்து
க்ளென் அவார்டு, அமெரிக்கா
ராபர்ட் ஹீக் மெடல், இங்கிலாந்து
கெமிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கனடா ப்ரைஸ், கனடா
உமன் இன் செல் பயாலஜி மெடல், இங்கிலாந்து
யங் சயின்டிஸ்ட் அவார்டு, இந்தியா
தி பால் மார்க்ஸ் ப்ரைஸ் ஃபார் கேன்சர் பயாலஜி, அமெரிக்கா

மூலக்கூறு உயிரியல் துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சில...

டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, புதுடெல்லி
டிபார்ட்மென்ட் ஆஃப் பயோ டெக்னாலஜி, புதுடெல்லி
இண்டியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச், புதுடெல்லி
கவுன்சில் ஃபார் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச், புதுடெல்லி
இண்டியன் கவுன்சில் ஃபார் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச், புதுடெல்லி
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), புதுடெல்லி
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்
ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்
பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர், மும்பை
இந்தியா முழுதுமுள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள்.

 - (அடுத்த இதழில்... விலங்கு நோயியல் (Veterinary Pathology))

தொகுப்பு: வெ.நீலகண்டன்