கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பயிற்சிப் பணி!



இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் பணிமனைகள் பல்வேறு இடங்களில் செயல்படுகின்றன. அவற்றில் கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் எனும் கப்பல்கட்டும் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

பயிற்சி பணி விவரம் :

கிராஜூவேட்/ டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு 120 பேர், டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 185 பேர், டெக்னீசியன் (வொக்கேசனல்) அப்ரண்டிஸ் பணிக்கு 15 பேர் என மொத்தம் 320 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
 
கல்வித் தகுதி :

எஞ்சினியரிங் அல்லது தொழில்நுட்பப் படிப்புகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பட்டதாரி/டெக்சீனியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் பிரிவில் சேரலாம். மேல்நிலைக் கல்வி (12-ம் வகுப்பு) அறிவியல் பிரிவில் படித்தவர்கள் வொக்கேசனல் பயிற்சியாக இதில் சேரலாம். ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பிரிவில் சேரலாம். விண்ணப்பதாரர்கள் அப்ரண்டிஸ்ஷிப் விதிகளுக்கு உட்பட்ட வயது வரம்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவு பயிற்சிக்கான வயது வரம்பை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி : 20.12.2018
 
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://cochinshipyard.com/career.htm என்ற இணையதளம் வழியாக பெயரை பதிவு செய்துவிட்டு, குறிப்பிட்ட முகவரிக்கு நகல் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விரிவான விவரங்களை அறிய https://cochinshipyard.com/career.htm என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.