தூக்கம்



தகவல்

மனிதர்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கிக் கழிக்கிறார்கள். அதாவது, 25 ஆண்டுகள்!

* குழந்தை பிறந்த முதல் 2 ஆண்டுகளில், அம்மாக்கள் 6 மாத அளவு
தூக்கத்தை இழந்து விடுகிறார்கள்.
* உறங்காமலே இருந்ததில் அதிகபட்ச சாதனை 11 நாட்கள்!
* தினமும் 7 மணி நேரங்களுக்குக் குறைவாக உறங்குவது ஆயுள் காலத்தையே குறைக்கும்.
* சரிவர தூங்காதவர்களுக்கு ஒரு வார காலத்திலேயே 0.9 கிலோ வரை எடை அதிகரிக்கவும் கூடும்.
* உறங்கும் போது தும்மல் வராது.
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்துகொள்ள முடியாத நிலைக்கு Dysania என்று பெயர்.
* சரியாக தூங்கவில்லை என்றாலும், அப்படி நினைப்பதே களைப்பைப் போக்கும்!
* உறங்கும்போது நினைவாற்றல் அதிகரிக்கிறது.
* டி.வி. பார்ப்பதை விடவும், தூங்கும் போதுதான் அதிக கலோரிகள் செலவழிகின்றன.

தொகுப்பு: சூர்யா