எளிய அழகுக் குறிப்புகள்!எளிய அழகுக் குறிப்புகள்!
 *நான்கு தேக்கரண்டி வெள்ளரிச் சாற்றோடு ஒரு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம்பழச் சாறும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர, பருக்கள் நீங்குவதோடு உடலுக்கு அழகையும் கூட்டும். *வாழைப்பழத்தில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால், எண்ணெய்ப் பசையுள்ள தோல் பளபளப்பாக மாறும்.
*மோரை பஞ்சில் தோய்த்து, முகம், கழுத்தில் தேய்த்து வந்தாலும் எண்ணெய்ப் பசையுள்ள தோல் பளபளப்பாகும்.
*நன்கு அரைத்த தேங்காய் விழுதில் இரண்டு தேக்கரண்டியும், இரண்டு தேக்கரண்டி தேனையும் கலந்து முகத்தில் நன்றாகத் தடவி பத்து நிமிடம் சென்றபின் கழுவி வந்தால், வறண்ட தோல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
*சிறிதளவு பாலேடு எடுத்துக் கொண்டு, அதில் சில துளிகள் எலுமிச்சை பழச் சாற்றைக் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால், பளபளப்பாகும்.
*இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
*கசகசாவை சிறிது நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து முகத்தில் தடவி முப்பது நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி வர, முகச்சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு திகழும்.
*பால், கேரட், ஆரஞ்சுச் சாற்றோடு சிறிது தேனையும் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவினாலும், முகம் அழகாகும்.
*ஆரஞ்சுப் பழச் சாற்றை முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து பயிற்றம் மாவைக்கொண்டு தேய்த்து முகம் கழுவினால், முகம் பொலிவோடு விளங்கும்.
*பாதாம் பருப்பை பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
*கடல்பாசி, பன்னீர், சந்தன எண்ணெய் இம்மூன்றையும் சம அளவில் கலந்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால், புது அழகோடு முகம் பளிச்சென்று இருக்கும். *பன்னீர் ரோஜா இதழ்களை பால்விட்டு அரைத்துப் பூசி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.
- தவநிதி
|