அறிவோம் தெளிவோம்!



அண்மையில் பெங்களூருவைச் சேர்ந்த விஸ்தாரா விமானம் பறவைகளின் தாக்குதலுக்கு உள்ளாக, பயணிகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டு பயணித்தனர்.  பறவைகள் விமானத்தில் மோதுவதால் விமானம் விபத்தில் சிக்கும் பேரபாயம் ஏற்படுகிறது.கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் பறவைகளின் மோதலால் உள்நாட்டு விமானங்களுக்கு 25 கோடி நஷ்டம் ஏற் பட்டது.  

பயணிகளுக்கு காலதாமத மும், விமானங்களுக்கு பேரிழப் பும் ஏற்படுத்தும் பறவைத் தாக்குதல் நிகழ்வுகள்  கடந்த  இரு ஆண்டுகளாக 50% அளவு அதிகரித்துவருகின்றன.  குடியிருப்புகள், இறைச்சிக்கடைகள், சதுப்புநிலங்கள், குளங்கள் ஆகியவை விமான நிலையங்களுக்கு அருகில் அமைந்திருப்பது  பறவைத்தாக்கு தல்களை அதிகரிக்கின்றன என விமானநிலைய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.  

2012 ஆம் ஆண்டு 607 ஆக இருந்த பறவைத் தாக்குதல் சம்பவங்கள், கடந்தாண்டில் ஆயிரத்து 125 என அதிகரித்துள்ளது விமானநிலைய கட்டு மானத்தில் அரசு செலுத்தவேண்டிய முக்கியத்துவத்தைக் கூறுகிறது.  “நவி மும்பை விமான நிலையம் கர்னாலா பறவைக் காப்பகத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது தவறான  கட்டுமானத்திற்கு சிறந்த  உதாரணம். அப்புறம் ஏன் தாக்குதல்கள் நடைபெறாது?” என ஆக்ரோஷமாக கேட்கிறார் பாதுகாப்பு ஆலோசகர் யஷ்வந்த் ஷெனாய்.