வெறுப்புவாதத்திற்கு எதிர்ப்பு!



ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் மதம், இனம், அரசியல் என அனைத்து தளங்களிலும் வெறுப்புவாதம் வளர்ந்து வருகிறது. இதனைத் தடுக்க முதல் அடியை இங்கிலாந்து அரசு எடுத்து வைத்துள்ளது.
இங்கிலாந்து அரசு விதிகளின்படி, சமூக வலைத்தள நிறுவனங்கள் வெறுப்புவாத பதிவுகளை அல்காரிதம் மூலம் கட்டுப்படுத்தாதபோது அபராதம் கட்டவேண்டும். இரண்டாவது, கருத்துக்களை பதிவிடுபவர்களின் வயதை பதிவு செய்வதும் இனி கட்டாயமாகிறது.  

டெக் நிறுவனங்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்தாலும் அரசு விதிகள் இவ்வாண்டின் இறுதியில் அமுலாகின்றன. சமூகத்திற்கு நல்லதோ, கெட்டதோ, வைரல் செய்திகளை பயன்படுத்தி லாபம் பார்க்கும் நிறுவனங்களை விதிகள் மூலம் கட்டுப் படுத்துவது சரியே என்றும், பாதகங்கள் அதிகம் எனவும் டெக் வட்டாரங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

ஃபேஸ்புக் நிறுவனம், இதுவரையில் 25 லட்சம் சர்ச்சை பதிவுகளை வெறுப்புவாத பிரச்னையால் நீக்கியுள்ளது. “சமூகத்தில் அரசமைப்பு மீதான வெறுப்பின் வடிகால்தான் வெறுப்புவாத கருத்துக்கள்” என்கிறார் சுதந்திர உரிமைகள் இயக்கத் தலைவர் ஜிம் கில்லாக்.