வானவில் கிராமம்



ஏழு வண்ண வானவில் அப் படியே பூமியில் இறங்கி ஒரு கிராமத்தின் மீது படர்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது கெம்பங்க் பெலங்கி. இந்தோனேஷியாவின் ஒரு மலைச்சாரலில் அமைதியாக அமர்ந்திருந்தது இந்தக் கிராமம். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இப்படியொரு கிராமம் இருக்கிறது என்றே யாருக்கும் தெரியாது; இந்தோனேஷியர்களுக்கும் கூட.

ஆனால், இன்று இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்... என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கெம்பங்க் பெலங்கி தான் டிரெண்ட். கடந்த வருடம் அதிக சுற்றுலாப் பயணிகள் விசிட் அடித்த டாப் 10 இடங்களில் வானவில் கிராமமும் ஒன்று. ஏறக்குறைய 200 வீடுகள் மட்டுமே உள்ள இந்தக் கிராமத்தை அரசே தன்னுடைய சொந்த செலவில் வடிவமைத்துள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் வானவில்லின் வண்ணங்களில் முப்பரிமாண முறையில் பெயின்ட் அடித்திருக்கிறார்கள். வீட்டின் சுவர்களில் அழகழகான ஓவியங்கள், நடைபாதையில் பசும் புல்வெளிகள், கண்ணாடி போன்ற தூய்மையான சாலைகள்... என ஓவியம் போல கெம்பங்க் பெலங்கி காட்சியளிக்கிறது!