அஞ்சலி



உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் மைக்கேல் உல்ஃப். பெரு நகரங்களில் ஒளிந்திருக்கும் அழகை, அதன் அன்றாட வாழ்வை, நெருக்கடியான கட்டடங்களைப் புகைப்படமாக்குவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் இவர்.
ஹாங்காங்கில் உள்ள இந்தக் கட்டடத்தை 2005-இல் புகைப்படமாக்கியிருந்தார் மைக்கேல் உல்ஃப். பல பரிசுகளைத் தட்டிய இப்புகைப்படம் இப்போது வைரலாகியிருக்கிறது. காரணம், கடந்த வாரம் மைக்கேல் உல்ஃப் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.