சாகசம்



இங்கே நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது இந்த வருடத்தில் எடுக்கப்பட்ட தலை சிறந்த புகைப்படங்களை. மொரோக்கோவில் உள்ள டைட்டன் பாலைவனத்தில் வருடந்தோறும் மே மாதத்தின் முதல் வாரத்தில் சைக்கிள் பந்தயம் கோலாகலமாக அரங்கேறுகிறது. உலகெங்கிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் பந்தயத்தில் கலந்துகொள்கின்றனர்.

இதைப் பந்தயம் என்று சொல்வதைவிட சாகசம்  என்று சொல்வதே சரி. ஆம்; சுட்டெரிக்கும் வெயில், பலமாக வீசும் கோடைக் காற்று, செங்குத்தாகச் செல்லும் பாதை, கொஞ்சம் கவனம் சிதறினாலும் கீழே விழ வேண்டிய நிலை என்று பல தடைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். உலகின் கடினமான பந்தயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.