சுசானா கபுடோவா



மத்திய ஐரோப்பாவில் வீற்றிருக்கும் அழகான ஒரு நாடு ஸ்லோவாக்கியா. சுமார் 49 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த நாட்டின் மக்கள் தொகை வெறுமனே 54 லட்சம்தான்.
பேச் சுரிமை, மனித உரிமை, பத்திரிகை சுதந்திரம், அமைதியான வாழ்க்கை, மனித நேயம் போன்ற அடிப் படையில் கணிக்கப்படும் வாழ்க்கைத் தரத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது ஸ்லோவாக்கியா. அதே நேரத்தில் உழைப்பாளர்களுக்கு அதிக வருமானம் தருவதால் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.

இங்கே வாழும் தொண்ணூறு சதவீத மக்களுக்கு சொந்தமாக வீடும், காரும் உள்ளது. ஐரோப்பாவிலேயே அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் நாடு, 180 நாடுகளுக்குள் நுழைய விசா-ஃப்ரீ, உலக அள விலான பாஸ்போர்ட் தரத்தில் 10-வது இடம் என ஸ்லோவாக்கியாவின் புகழை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஸ்லோவாக்கியா வின் வரலாற்றில் முதல் முறையாக சுசானா கபுடோவா என்ற பெண் அதிபராகியிருக்கிறார். தவிர, அந்நாட்டின் இளம் வயதில் அதிப ரான முதல் நபரும் இவரே. அங்கே நடந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளை அள்ளி, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்திருக்கிறார்.

வழக்கறிஞர், அரசி யல்வாதி, போராளி என பன்முகங்களுக்குச் சொந்தக்காரரான சுசானா தொழிலாளி வர்க்கத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பு முடிந்த உடன் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றினார். குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் நிகழ்வுகளைக் கண்காணிக்கும் பிரிவில் பணி செய்த போது கிடைத்த அனுபவங்கள் அவரை அரசியல் நோக்கி நகர்த்தின.

காற்று, நீர், மண் மாசுபடுவதைக் கண்டித்து மிகப்பெரிய பேரணி ஒன்றை தலைமையேற்று நடத்தினார் சுசானா. இது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது. 2017-இல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், வளர்ந்து வரும் ‘புரோகிரஸ்ஸிவ் ஸ்லோவாக் கியா’ என்ற கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

2018-இல் அந்தக் கட்சியின் துணை சேர்வுமன் ஆனார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் பொறுப்பில் இருந்து விலகி, இன்று அதிபரும் ஆகிவிட்டார். நாள் தவறாமல் யோகா செய்து வரும் சுசானாவின் வயது 45.