ப்ரியங்களுடன்



ஒரு சிவப்பு ரோஜாவே, ரோஜா பூங்கொத்தை ஏந்திப் புன்னகை செய்வது போல இருந்தது அட்டைப்படம்! - ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
சித்திரை சிறப்பிதழ் ஜில். எடை குறைக்கும் உணவுகள் 30 அபாரம்! 
- ஏ.சவுமியா,  சென்னை-64 மற்றும் பி.கவிபாலா, பொள்ளாச்சி.

‘கண்ட இடங்களிலும் சூப் குடிக்கிறவரா நீங்க?’ என்ற கேள்வியைக் கேட்டு, ‘அது சரியல்ல’ என்கிற பதிலையும் தந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.
- ம.வசந்தா மனோகரன், கச்சிராயபாளையம் மற்றும் பி.வைஷு, சென்னை-68.

‘தொடுதல் கற்போம்... கற்பிப்போம்’ பகுதி இயல்பாக, எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக இருப்பது சிறப்பு. ‘ஒளிகாட்டி’யில் மல்டிமீடியா பற்றி கல்வியாளர் ராஜராஜன் சொன்னது, என் தோழியின் மகனுக்கு மேற்படிப்பை தேர்ந்தெடுக்க உதவியாக இருந்தது.
- மகாலெஷ்மி.எஸ்., புதுச்சேரி-9 மற்றும் வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

‘குட் டச்... பேட் டச்...’ விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல பகுதி.
- பானு பெரியதம்பி, சேலம்-30 (மின்னஞ்சலில்)...

அ.வெண்ணிலாவின் எழுத்து அச்சு அசலாக என் எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது.
  அ.பிரேமா, சென்னை-68 மற்றும் உமாதேவி பலராமன், திருவண்ணாமலை-1.

‘எந்த வேலையும் இல்லாத நேரத்தில் மட்டுமே சமையலறைப் பக்கம் தலை காட்டுவேன்’ என்று சொல்கிற வாய்ப்பு திருமணமான எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காது. என்னைப் போல அம்மாவோடு வாழக் கொடுத்து வைத்திருக்கும் லட்சத்தில் ஒரு பெண்ணுக்கே சாத்தியம்!
- தவமணி கோவிந்தராசன், சென்னை-13.

உமாராஜ் அவர்களின் உழைப்பு, வெற்றி பிரமிப்பை ஏற்படுத்தியது. உழைக்கத் தயாராக இருந்தால் இங்கு வாய்ப்புகள் ஏராளம் என்பது தன்னம்பிக்கை டானிக்.
-  இ.டி.ஹேமமாலினி,  சென்னை-23, ஜி.மைதிலி கோகுலகிருஷ்ணன், திருவாரூர் மற்றும் எஸ்.முத்துலட்சுமி, சென்னை-17.

நடிகை மனிஷா யாதவ், தன் அம்மா மேல் வைத்திருப்பது முரண்கள் இல்லாத அன்பினால்
கட்டப்பட்ட அரண். - பி.கீதா, சென்னை-68 மற்றும் பழ.கவிதா சிவமணி, புன்செய்புளியம்பட்டி.

கை நிறைய சம்பாதித்தாலும் பிறருக்கு உதவும் நோக்கத்தோடு செயல்படும் முத்தமிழ் கலை விழி பாராட்டுக்குரியவர். அதோடு, பூக்களுடன் போராடும் பூவையர், ‘சுபா சார்லஸின் மனம் மயங்குதே...’ தொடர், ஸ்பைடர் உமன் கார்த்திகேயனி... பளிச் பக்கங்கள்!
- சுகந்தா ராம், சென்னை-59 மற்றும் உமா சாய்நாதன், தஞ்சாவூர்-1.

அரசியல் பாரம்பரியம் மிக்க அமரர் பார்வதி கிருஷ்ணன் பற்றிய தகவல்கள் அருமை.      - கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
மேரி உல்ஸ்டோன் கிராஃப்டின் துயர வாழ்க்கை மனதை கனக்க வைத்தது. -  ர.சுமதி, ராசிபுரம்.

உலகின் டாப் 10 உணவு தேவதைகள் தகவல்கள் அறுசுவை. ஞாபகப் பேழையில் பால்ய காலத்தில் கேட்ட கதைகளின் மிச்சம் இன்னும் இருக்கிறது (செல்லமே...). ‘மகிழ்ச்சி என்பது யாதெனில்...’ குதூகலப் பக்கம். ‘காகிதக் கூழில் கலைநயம்’ அழகு கொலு விருந்து.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம், இ.லில்லி ஜெசிந்தா, திருநெல்வேலி மற்றும்
ராஜேஸ்வரி ஹரிஹரன், திருவனந்தபுரம்.

அன்பான அணுகு முறையில் எந்தப் பிரச்னையையும் தீர்க்கலாம் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் மருத்துவர் காமராஜ்.
- ஜே.தனலட்சுமி, சென்னை-12 மற்றும் எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி-6.
பாடகி சாருலதா மணியுடனான சந்திப்பு கண்ணியமான, பண்பட்ட நேர்முகம்.
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

சவுமியா சிம்மன் மாற்றுத் திறனாளி அல்ல... பலர் மனதையும் மாற்றும் திறனாளி. ‘ஆரோக்கியப் பெட்டகம்’ பகுதியில் சுண்டைக்காயின் மகத்துவம் மலைக்க வைத்தது.
- பி.கவிதா நரசிம்மன், சர்க்கார்பதி மற்றும் ரேணு வினோத், சென்னை-56. 

தூக்கத்தை வரவழைக்கும் அரோமா தெரபி வியக்க வைத்தது.
- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ். ரவீந்திரன், நாகர்கோவில்.

‘ஹோம் கார்டன்’ பகுதியில் விவரித்திருந்த கத்தரியையும் சுண்டைக்காயையும் ஒட்டுக் கட்டும் முறை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
 - வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்)...