பேக்கேஜ் ஃப்ரெண்ட்ஸ்!




வெயில் பட்டையைக் கிளப்பிப் பதற வைக்கிறது. ஆனாலும், பல குடும்பங்களுக்கு இந்தக் கோடை காலம் விடுமுறைக் காலம். குற்றாலத்தில் குளிக்கவும் கொடைக்கானல் குளிரை அனுபவிக்கவும் பலரும் படையெடுப்பது இந்த தினங்களில்தான். தமிழக சுற்றுலா, இந்திய சுற்றுலா, வெளிநாட்டுப் பயணம்...

எதுவாகவும் இருக்கட்டும். போக்குவரத்து, தங்கும் இடத்துக்கு முன்பதிவு செய்வது உள்ளிட்ட பயணத் திட்டங்களில் முக்கியமானதாக இருப்பது லக்கேஜ்! அதிலும் துணிமணி மற்றும் அவசியமான பொருட்களை எப்படி எடுத்துச் செல்வது என்பதே பல பெண்களின் தீராத கவலை. மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் விதவிதமான டிராவல் பேக்குகள், அவற்றின் விலை, தரம் என அனைத்து விவரங்களும் இங்கே...