தோழிகளுக்கான நவம்பர் மாத ராசி பலன்



மேஷம்

லாபம் கொழிக்கப் போகும் மாதம் இது! குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். வியாழக்கிழமைகளும் 3, 12, 21, 30 தேதிகளும் சுப காரியங்கள் பேச, சொத்து வாங்க, புதுத்தொழில் தொடங்க ஏற்ற தினங்கள். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், புதன் கிழமைகளில் பெருமாளையும், சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், விநாயகரையும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் ஈஸ்வரனையும் வழிபட்டால் சண்டை சச்சரவுகளும், ஆரோக்கியக் குறைபாடும், தேவையற்ற தொல்லைகளும், பண, பொருள் விரயமும் ஏற்படாது. சந்திராஷ்டம நாட்கள்: 14ம் தேதி காலை 7:58 மணி முதல் 16ம் தேதி காலை 10:40 மணி வரை விழிப்புடன் செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 3, 4, 5ம் தேதி காலை 11:15 மணி வரை, 10, 11, 12, 13, 19, 20, 21, 22, 25ம் தேதி காலை 8:33 மணி முதல் 26, 27 ஆகிய தேதிகளில் சந்திரனால் நன்மைகள் நடக்கும்.

ரிஷபம்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறும் மாதம் இது! சனி, புதன் இருவரும் அனுகூலமாயிருப்பதால் புதன், சனிக்கிழமைகளும் 5 ,8, 14, 17, 23, 26 தேதிகளும் அதிர்ஷ்ட தினங்கள். பண வரவு உண்டு.சிலருக்கு விவாகம் கூடிவரும். 15ம் தேதி வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளும் 1, 6, 10, 15 தேதிகளும் ராசியானவை. செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கேற்றி வலம் வந்தால் பழுது நேராது.வியாழக்கிழமைகளில் குருவை வணங்கினால் தொழிலில் பிரச்னை ஏற்படாது. 7, 16, 25 தேதிகளில் விநாயகரை வணங்கினால் சஞ்சலம் ஏற்படாது.     சந்திராஷ்டம நாட்கள்: 16ம் தேதி காலை 10:40 மணி முதல் 18ம் தேதி மதியம் 1:45 மணி வரை எச்சரிக்கை தேவை. சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 5ம் தேதி காலை 11:12 மணி முதல் 6, 7, 12, 13, 14,   15, 21, 22, 23, 24, 28ம் தேதி காலை 9:00 மணி முதல் 29 முழுவதும் மற்ற கிரகங்களின் பாதிப்பு ஏற்படாமல் சந்திரன் காப்பார்.

 

மிதுனம் 

  செல்வ வளம் சிறப்பாக இருக்கும் மாதம் இது! சுக்கிரன், ராகு இருவரும் சாதக பலன்களைக் கொடுப்பதால் வெள்ளிக்கிழமைகளும் 4, 6, 13, 15, 22, 24 தேதிகளும் ராசியானவை.  தைரியத்தையும் நேசமனப்பான்மையையும் துணையாகக் கொண்டு காரியங்களை முடிப்பீர்கள். சண்டைகள் சமாதானமாகும். சுற்றமும் தோழமையும் உதவுவார்கள். திறமை பிரகாசிக்கும். 16ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளும் 19, 28 தேதிகளும் அனுகூலமானவை. வியாழக்கிழமைகளில் குருவையும், செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரையும், சனிக்கிழமைகளில் சனிபகவான், விக்னேஸ்வரரையும் வழிபட்டால் பண விரயமும், பிள்ளைகளால் சிக்கலும் ஏற்படாது.     சந்திராஷ்டம நாட்கள்: 18ம் தேதி மதியம் 1:45 மணி முதல் 20ம் தேதி மாலை 5:25 மணி வரை காரியங்களில் கவனம் தேவை. சந்திர அனுகூல தினங்கள்: 3, 4, 5ம் தேதி காலை 11:12 மணி வரை, 8, 9, 14ம் தேதி காலை 8:00 மணி முதல் 15, 16, 17, 18ம் தேதி மதியம் 1:45 மணி வரை 23, 24, 25, 26, 27, 30 ஆகிய தேதிகளில் சந்திரன் சாதகமான பலன்களைத் தருவார்.

கடகம் 
ஆற்றல் பெருகும் மாதம் இது! சுக்கிரன், செவ்வாய், புதன், கேது, குரு என ஐந்து கிரகங்கள் அனுசரணையாக இருப்பதால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்     கிழமைகளும், 3, 5, 6, 7, 9, 12, 14, 15, 16, 18, 21, 23, 24, 25, 27, 30 தேதிகளும் அதிர்ஷ்டமானவை. பிரிந்தவர் கூடுவர். பயம் விலகும். சண்டைகள் சமாதானமாகும். திருமணமாகாதோர்க்கு விவாகம் கூடிவரும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனையும், சனிக்கிழமைகளில் சனீஸ்வரரையும்,     4, 13, 22 தேதிகளில் துர்க்கையையும் வணங்கினால் பிள்ளைகளால் பிரச்னையோ, பொருள் நஷ்டமோ ஏற்படாது.     சந்திராஷ்டம நாட்கள்: 20ம் தேதி மாலை 5:25 மணி முதல் 22ம் தேதி இரவு 11:50 மணி வரை கவனமாகச் செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 10, 11, 17, 18, 19, 20ம் தேதி மாலை 5:24 மணி வரை, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் மற்ற கிரகங்களின் பாதிப்பு இருக்காது.

சிம்மம் 
பண வரவு கணிசமாக இருக்கும் மாதம் இது! சுக்கிரன், சனி இருவரும் சாதகமாக உலா வருவதால் வெள்ளி, சனிக்கிழமைகளும் 6, 8, 15, 17, 24, 26 தேதிகளும் சிறப்பான நாட்கள். சிலருக்குப் பதவியோ,பதவி உயர்வோ கிடைக்கும். சிலருக்கு வீடு வாங்கும் வாய்ப்பு உண்டு. 15ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளும் 1, 10 தேதிகளும் ராசியான தினங்கள். பணம் விரயமாகாமலிருக்க வியாழக்கிழமைகளில் குருவையும், செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், 7, 16, 25 தேதிகளில் பிள்ளையாரையும் வழிபடவும். பிள்ளைகளால் வரும் சிக்கலும் நீங்கும். சந்திராஷ்டம நாட்கள்: 22ம் தேதி இரவு 11:50 மணி முதல் 25ம் தேதி காலை 8:33 மணி வரை எச்சரிக்கையோடு இருக்கவும். சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 3, 4, 5ம் தேதி காலை 11:10 மணி வரை, 9, 12, 13, 18ம் தேதி மதியம் 1:45 மணி முதல் 19, 20,21, 22, 28, 29, 30 ஆகிய தேதிகளில் மற்ற கிரகங்களின் தீய பாதிப்பிலிருந்து சந்திரன்காப்பாற்றுவார்.

  கன்னி   

வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும் மாதம் இது! குரு, சுக்கிரன், ராகு மூவரும் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாழன், வெள்ளிக்கிழமைகளும் 3, 4, 6, 12, 13, 15, 21, 22, 24, 30 ஆகிய தேதிகளும்
    சுபகாரியங்கள் பேச, வீடு, நிலம் வாங்க, புது முயற்சிகளுக்கு ஏற்ற தினங்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்குப்பூர்வீகச் சொத்து வரும். எடுத்த காரியம் லாபமாகும். திருமண வயது பெண்களுக்கு நிச்சயமாகும். 16ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளும் 19, 28 தேதிகளும் அதிர்ஷ்டமானவை. சனி, புதன்கிழமைகளில் பெருமாளையும், 7, 16, 25 தேதிகளில் கணேசரையும் வணங்கினால் பொருள் கையை விட்டுப் போகாது. ஆரோக்கியம் சீராக இருக்கும். சந்திராஷ்டம நாட்கள்: 25ம் தேதி காலை 8:33 மணிமுதல் 27ம் தேதி மாலை 6:55 மணி வரை கவனமாக இருக்கவும். சந்திர அனுகூல தினங்கள்: 3, 4, 5, 6, 7, 10, 11, 14, 15, 16ம் தேதி காலை 10:40 வரை 22, 23, 24 தேதிகளில் சந்திரனால் நன்மைகள்நடக்கும்.


துலாம்
  வழக்குகளில் வெற்றி கிடைக்கும் மாதம் இது! சுக்கிரன், அங்காரகன் இருவரும் சாதக பலன்களைக் கொடுப்பதால் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளும் 6, 9, 15, 18, 24, 27 தேதிகளும் சிறப்பானவை.வேலை விண்ணப்பங்கள் சாதகமாகும். சிலருக்குப் பதவியும், சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும். சிலருக்கு சொத்து வாய்ப்பு உண்டு.    வியாழக்கிழமைகளில் குருவையும், சனிக்கிழமைகளில் சனிபகவான், கணபதியையும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஈஸ்வரனையும், புதன்கிழமைகளில் பெருமாளையும் வழிபட்டால் சிரமங்கள் இருக்காது.     சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 1ம் தேதி அதிகாலை முதல் 2ம் தேதி இரவு 11:00 மணி வரை, 27ம் தேதி மாலை 6:55 மணி முதல் 30ம் தேதி காலை 5:40 மணி வரை விழிப்புடன் செயலாற்றவும்.     சந்திர அனுகூல தினங்கள்: 5, 6, 7, 8, 9, 12, 13, 16ம் தேதி காலை 10:40 மணி முதல் 17, 18ம் தேதி மதியம் 1:45 மணி வரை, 23, 24, 25, 26, 27ம் தேதி மாலை 6:54 மணி வரை சந்திரனால் நன்மைகள் நடக்கும்.
விருச்சிகம் 
வெற்றி தரும் மாதம் இது! சுக்கிரன், குரு, இருவரும் சாதகமாக இருப்பதால் வியாழன், வெள்ளிக்கிழமைகளும் 3, 6, 12, 15, 21, 24, 30 தேதிகளும் சுபகாரியங்கள் பேச, சொத்து வாங்க, புது முயற்சிகளுக்கு ஏற்றவை. கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கூடிவரும். தெளிவான சிந்தனையும், சாதுர்யமான வாக்கு வசீகரமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழிலாளர் பிரச்னை தீரும்.கலைத்துறையினர் புகழ் பெறுவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், சனிக்கிழமைகளில் விநாயகர், சனீஸ்வரரையும், புதன்கிழமைகளில் பெருமாளையும், ஞாயிற்றுக்கிழமைகளில்சிவபெருமானையும் வணங்கினால் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமில்லை.    சந்திராஷ்டம நாட்கள்: 2ம் தேதி இரவு 11:00 மணி முதல் 5ம் தேதி காலை 11:00 மணி வரை, 30ம் தேதி காலை 5:40 மணி முதல் நாள் முழுவதும் கவனமாக இருக்கவும். சந்திர அனுகூல தினங்கள்: 1,2, 8, 9, 10, 11, 14, 15, 16ம் தேதி காலை 10:40 மணி வரை, 18ம் தேதி மதியம் 1:45 மணி முதல் 19, 20ம் தேதி மாலை 5:20 மணி வரை, 25, 26, 27, 28, 29 தேதிகளில் சந்திரனால் நன்மைகள் நடக்கும்.

தனுசு
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் மாதம் இது! சனி, கேது, புதன், சூரியன் நால்வரும் அனுகூலமாக இருப்பதால் ஞாயிறு, புதன், சனிக்கிழமைகளும் 1, 5, 7, 8, 10, 14, 16, 17, 19, 23, 25,26 தேதிகளும் சுபகாரியங்கள் பேச, வீடு, நிலம் வாங்க, புதுத்தொழில் தொடங்க ஏற்றவை. வாரிசுகளால் சந்தோஷம் பெருகும். பணவரவு உண்டு. விவாகம் கைகூடும். 17ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளும் 24ம் தேதியும் ராசியானவை. விழா, விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், வியாழக்கிழமைகளில் குருவையும் வழிபட்டால் மன அமைதி கெடாது. அனாவசியச் செலவுகளையும் தவிர்த்துக் கொள்ளலாம்.    சந்திராஷ்டம நாட்கள்: 5ம் தேதி காலை 11:00 மணி முதல் 7ம் தேதி இரவு 7:23 மணி வரை எச்சரிக்கையாக இருக்கவும். சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 16ம் தேதி பகல் 10:40 மணி முதல் 18ம் தேதி பகல் 1:45 மணி வரை 21, 22, 28, 29, 30 தேதிகளில் சந்திரனால் நன்மை உண்டு.

மகரம்

லாபகரமான மாதம் இது! குரு, ராகு, புதன், சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் சாதகமாக உலவுவதால் ஞாயிறு, புதன், வியாழக்கிழமைகளும் 1, 3, 4, 5, 10, 12, 13, 14, 19, 21, 22, 23, 28, 30 தேதிகளும் அதிர்ஷ்டமானவை. சிலருக்கு விவாகம் நிச்சயமாகும். சிலர் வீடு, நிலம் வாங்குவார்கள். சிலருக்குப் பட்டாடை, ஆபரணம் பரிசாகக் கிடைக்கும்.தொடங்கிய காரியம் திருப்தியாகும். 16ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளும் 6, 15 தேதிகளும் ராசியானவை. செவ்வாய்க்கிழமைகளில் குமரவேலையும், 7, 16, 25 தேதிகளில் கணபதியையும் வணங்கினால் பிள்ளைகளால் பிரச்னையோ, பண நஷ்டமோ, ஆரோக்கியக் குறைபாடோ ஏற்படாது. சந்திராஷ்டம நாட்கள்: 7ம் தேதி இரவு 7:23 மணி முதல் 9ம் தேதி நள்ளிரவு 1:35 மணி வரை கவனமாகச் செயல்படவும். சந்திர அனுகூல தினங்கள்: 4, 5, 6, 13, 14, 15, 16ம் தேதி காலை 10:40 மணி வரை, 18ம் தேதி மதியம் 1:45 மணி முதல் 19, 20ம் தேதி மாலை 5:20 மணி வரை, 22ம் தேதி காலை 11:50 மணி முதல் 23, 24 தேதிகளில் சந்திரனால் நன்மை நடக்கும்.

கும்பம்
புகழ் சேரும் மாதம் இது! சுபகாரியங்கள் பேச, சொத்து வாங்க, புதுமுயற்சிகளுக்கு வெள்ளிக்கிழமைகளும், 6, 15, 24 தேதிகளும் ஏற்றவை. சிலர் வீடு கட்டுவார்கள். தொழிலாளர் - முதலாளி உறவு சுமுகமாக இருக்கும். கவிஞர்கள், கலைஞர்கள், அழகுப் பொருள் விற்பனையாளர்கள் லாபம் பெறுவார்கள். பண வரவு கட்டாயம் உண்டு. கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். 16ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளும் 19, 28 தேதிகளும் அதிர்ஷ்டமானவை. எடுத்த காரியம் வெற்றியடையும். செவ்வாய்க்கிழமைகளும் 9, 18, 27 தேதிகளும் வீடுவாங்க, விற்க லாபகரமானவை.வழக்கறிஞர்களும் முப்படை வீரர்களும் பாராட்டப்படுவார்கள். சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், விக்னேஸ்வரரையும், 4, 13, 22 தேதிகளில் துர்க்கையையும், வியாழக்கிழமைகளில் குருவையும், புதன்கிழமைகளில் திருமாலையும் வணங்கினால் வீண்பழி, பகை, அலைச்சல், பொருட் சேதம் இருக்காது.    சந்திராஷ்டம நாட்கள்: 9ம் தேதி நள்ளிரவு 1:35 மணி முதல் 12ம் தேதி காலை 6:00 மணி வரை கவனம் தேவை. சந்திர அனுகூல தினங்கள்: 5, 6, 7, 8, 9, 14, 15, 16, 17, 18ம் தேதி மதியம் 1:45 மணி வரை, 21, 22, 26, 27 தேதிகளில் மற்ற கிரகங்களால் தீங்கு ஏற்படாது.   

மீனம் 
மகிழ்ச்சி தரும் மாதம் இது! புதன், கேது இருவரும் அனுகூலமாயிருப்பதால் புதன்கிழமைகளும், 5, 7, 14, 16, 23, 25 தேதிகளும் சுபகாரியங்கள் பேச, வீடு, நிலம் வாங்க, புதுத்தொழில் தொடங்க ஏற்றவை. எண்ணியது ஈடேறும். சிலருக்குப் புத்தாடை பரிசாகக் கிடைக்கும். பண வரவு கட்டாயம் உண்டு. மாணவிகள் தங்கள் நுட்பமான அறிவால் பாராட்டப்படுவார்கள். சிலருக்கு வேலையும் சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பகைமை ஒடுங்கும். மருத்துவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் புகழ்பெறுவார்கள். தொழிலில் சிக்கல் ஏற்படாமலிருக்க குருவையும், பண நஷ்டம் வராமலிருக்க சனியையும் வழிபட வேண்டும். 17ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளும் 24ம் தேதியும் ராசியானவை. திருமணமாகாத பெண்களுக்கு விவாகம் கூடிவரும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயத்தில் தீபம் ஏற்றினால் கௌரவத்துக்குப் பழுது ஏற்படாது.     சந்திராஷ்டம நாட்கள்: 12ம் தேதி காலை 6:00 மணி முதல் 14ம் தேதி காலை 7:58 மணி வரை எச்சரிக்கையோடு இருக்கவும். சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 8, 9, 10, 11, 17, 18, 19, 20ம் தேதி மாலை 5:20 மணி வரை, 23, 24, 28, 29 ஆகிய தேதிகளில் சந்திரனால் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.