ப்ரியங்களுடன்...



*கேரளாவின் பாரம்பரிய விளையாட்டான ‘களரி பயட்டு’ பற்றிய கட்டுரை படிக்க விறு விறுப்பாக இருந்தது. இந்தக் கலையை கற்றுக் கொள்ள நினைப்பவர்களின் ஆவல் மேலோங்கியது.
- த.சத்திநாராயணன், அயன்புரம்.

*நகைகளை இப்படித்தான் வடிவமைப்பு செய்கிறார்கள். வியப்பாகவும், அருமையாகவும் இருந்தன. பனை ஓலையைக் கொண்டு பிரேஸ்லட் செய்தேன் என்று அகல்யா கூறியது ரொம்பவும் சிறப்பு.
- வண்ணை கணேசன், சென்னை.

*15 வருடங்களாக ஒரேயொரு மெஷினில் மெழுகுவர்த்தி, கற்பூரம் போன்ற பூஜைப் பொருட்கள் தயாரித்து பல பெண்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி உதவி செய்து வரும் ஜெயசுதாவை திறமையான தொழிலதிபர் என்றே சொல்லலாம்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

*கோடையின் வெப்பத்தை தவிர்க்க பல இயற்கை முறை குளிர்பானங்களை கூறிய சகோதரி கவிதா சரவணன் அவர்களுக்கு நன்றி.
- பிரீத்தி, செங்கல்பட்டு.

*துர்கா தேவி வழங்கியிருந்த மலர் மருத்துவம் ஆரோக்கியத்தின் திறவுகோலாகும்.
- கலைச்செல்வி வளையாபதி, கரூர்.

*விளிம்பு நிலை வாழ்வை புகைப்படம் மூலம் ஆவணமாக்கும் நிஷா சகோதரிகளின் முயற்சி வரவேற்கத்தக்கது.
- கே.எல். பகவதி, சென்னை.

*‘சக்கர நாற்காலியில் எழுந்து நிற்கலாம்!’ என தைரியம் கொடுக்கும் சுஜாதா நிவாசன் அவர்களுக்குப் பாராட்டுகள்!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*க்யூப் விளையாட்டில் இத்தனை விஷயங்கள் அடங்கி உள்ளதா? கட்டுரை படிக்க படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. மேலும் இதை கற்க ஆசை வருகிறது. ரஹமத் துனிசா பேகம் பெரியவர்களும் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.
- ராஜிகுருசுவாமி, சென்னை.

*இயற்கையோடு சேர்ந்து கட்டுமான பணியை செய்யும் கிருத்திகா அவர்களை பாராட்டுகிறோம். பழையகால பொருட்களை சேர்த்து அழகான வீட்டை கட்டியவருக்கு வாழ்த்துகள்.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்.

*மாதவிடாய் சுழற்சி முறை குறித்தும், அதற்கு இயன்முறை மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய விஷயங்களையும் இயன்முறை மருத்துவர் கோமதி இசைக்கர் மூலம் அறிந்தேன்.
- கோகிலாராஜு, திருவாரூர்.

*ஐ.டி. வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் லட்சத்தில் லாபம் ஈட்டும் பிருந்தா குடும்பம் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்கிறது. விவசாயத்திற்கு தற்போது மெருகு கூடுவது மகிழ்ச்சியான விஷயம்.
- பானுமதி வாசுதேவன், மேட்டூர்.

அட்டைப்படம்: கண்மணி புகைப்படம்: கேமரா செந்தில்