சிக்கன் பிரியாணி



என்னென்ன தேவை?

சிக்கன் - 100 கிராம்,
கிராம்பு - 2,
தனியா தூள் - 30 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 20 கிராம்,
ஏலக்காய் - 2,
பட்டை - 2,
வெங்காயம் - 100 கிராம்,
எலுமிச்சை - 1,
நெய் - 50 கிராம்,
இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்,
தயிர் - 50 கிராம்,
பனீர் - 1 பாக்கெட்,
ஜாதிக்காய் - 1 டீஸ்பூன்,
பாஸ்மதி அரிசி - 150 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் - 50 கிராம்,
புரானி - 100 கிராம் (தயிருடன் சிறிதளவு பூண்டு சாறு கலக்க வேண்டும்),
மிர்சி கா சாலான் - 100 கிராம்,
மீத்தா அத்தர் - 2 மி.லி.,
பச்சைமிளகாய் - 10 கிராம்,
பொன்னிறமாக வறுத்த வெங்காயம் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் நெய்யை சூடு செய்து மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். சிக்கன் நன்கு வெந்து பிரியாணியுடன் கலந்து வந்ததும் அதில் குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். சாலான் மற்றும் ஃப்ரெஷ் கிரீமுடன் பரிமாறவும்.