பொடி கோழி



என்னென்ன தேவை?

எலும்பு நீக்கப்பட்ட சிக்கன் - 200 கிராம்,
கடலைப்பருப்பு - 100 கிராம்,
உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 25 கிராம்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 5.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் எண்ணெ யில்லாமல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் சிக்கனை சேர்த்து மூடிவைத்து வேகவிடவும். சிக்கன் நன்கு ெவந்ததும், பொடித்த கலவையை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். பிறகு கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.