அம்ரிட்ராரி தவா மிர்ச்சி



என்னென்ன தேவை?

மீன் துண்டுகள் - 200 கிராம்,
உப்பு - தேவைக்கு,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கடலை மாவு - 1½ டீஸ்பூன்,
அரிசி மாவு - 1½ டீஸ்பூன்,
சோள மாவு - 1½ டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
ஓமம் தண்ணீர் - 1 மி.லி.,
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
முட்டை - 1,
தனியா - 1 டீஸ்பூன்,
கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 30 மி.லி.,
எலுமிச்சைச்சாறு - 1 பழம்.

எப்படிச் செய்வது?

மீன் துண்டுகளை இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற பொருட்களை எல்லாம் கெட்டியான மாவு பதத்திற்கு கலக்கவும். மீன் துண்டுகளை மாவில் நன்கு பிரட்டவும். பிறகு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும். கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.