வான்டன் வறுத்த கறி



என்னென்ன தேவை?

சிக்கன் கொத்தின கறி - 100 கிராம்,
வான்டன் அட்டை - 15,
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி விழுது - 50 கிராம்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவைக்கு,
கரம்மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்,
தேங்காய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சிக்கன் கீமாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து வான்டன் அட்டைக்குள் வைத்து மடித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெயை சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி விழுது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கி, பிறகு இதில் வறுத்த வான்டன் அட்டைகளை சேர்த்து மசாலாவை நன்றாக கலந்து விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்