பொரிச்ச கோழி



என்னென்ன தேவை?

கோழி எலும்பு நீக்கப்பட்டது - 100 கிராம்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சோள மாவு - 1½ டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி அனைத்து மசாலா பொருட்கள், 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.