கறி முருங்கை குழம்பு



என்னென்ன தேவை?

மட்டன் - 250 கிராம்,
முருங்கைக்காய் - 2,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி விழுது - 50 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
தேங்காய் விழுது - 1½ டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மட்டனை இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது, மற்ற மசாலா பொருட்களை சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பிறகு முருங்கைக்காய் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் வேகவைத்த மட்டனை சேர்க்கவும். மட்டன் மசாலாவுடன் நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.