ரசிகனை மதிக்கும் சந்தானம்!கொரோனா ஊரடங்கில் கோலிவுட் மொத்தமும் அடங்கிப் போய் கிடக்கிறது. விஜய் சேதுபதி போன்ற சமூக அக்கறை கொண்ட ஒரு சிலர்தான் உயிரையும் துச்சமாக மதித்து நேரடியாகக் களமிறங்கி தேவைப் படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் யாருடைய நல்லது, கெட்டதுக்கும் யாரும் போக முடியாதபடி சமூக இடைவெளி நெருக்கடியால் பிரபலங்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் -தன்னுடைய தீவிர ரசிகரின் தந்தை காலமானார் என்பதைக் கேள்விப்பட்டு, யாரும் அழைக்காமலேயே தானே முன்வந்து நேரடியாக இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறார் நடிகர் சந்தானம். அஞ்சலி செலுத்த வந்தவர், இறுதிச்சடங்குகள் நடக்கும் வரை முன்னின்று நடத்திக் கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி கேட்டபோது “இன்பமான வேளையிலே கூட இருக்கிறதைவிட துன்பத்துலே கை கோர்த்து நிக்குறதுதான் முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார் சந்தானம்.

- யுவா