நைட்டி!சரோஜாதேவி பதில்கள்

ஒருசில பெண்கள் முழு முதுகும் தெரிவது போல ஜாக்கெட் அணிகிறார்களே?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
முதுகுதானே சாமி? அதுக்கு அதிர்ச்சி அடைந்தால் எப்படி?

பார்க்க ஆசைப்படுவோம். பழகினா அலுத்துடுவோம். அது என்ன?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பதிலையும் விடுகதையாவே சொல்லுறேன். மாடியில் டமடம சப்தம். கீழே சளசள தண்ணீர்.

சினிமாவைப் போலவே சாலையில் காதலர்கள் ஆடிப்பாடினால் என்ன?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அடுத்தபடியாக பர்ஸ்ட்நைட் சீனையும் லைவ்வாக கேட்பீர்கள். தேவையா?

பாலுக்கு சர்க்கரையா? சர்க்கரைக்கு பாலா?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
சர்க்கரையே வேணாம். பால் கிடைச்சா போதும் என்கிறார்கள் டயாபடிஸ்காரர்கள்.

நைட்டி கண்டுபிடிக்கப்படாது போயிருந்தால்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
டிக்டொக் வீடியோக்கள் கவர்ச்சிகரமாக அமைந்திருக்காது.