கொரோனா கால திரிஷா!தமிழ் சினிமாவில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக இருப்பவர் திரிஷா. தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ள திரிஷா தற்போது ‘பரமபதம்’, ‘ராங்கி’, மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’, மலையாளத்தில் மோகன்லால் படம் என்று பிஸியாக இருக்கிறார்.

கொரோனாவால் கடந்த 80 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வராமல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ரெகுலராக ஜிம்முக்கு செல்லும் வழக்கம் உள்ள திரிஷா தற்போது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.நாய் வளர்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட திரிஷா, தான் வளர்க்கும் நாய்களோடு தன்னுடைய தெருவில் உள்ள நாய்களுக்கும் தினமும் உணவளித்து பராமரித்து வருகிறாராம்.

- ரா