ஆந்திரா ஆவக்காய்




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



     சைதன்யா நடிக்கும் ‘100 பர்சன்ட் லவ்’ படத்துக்காக ‘சுப்ரமண்யபுரம்’ ஸ்வாதியை ஒரு பாடல் பாட வைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

‘நந்தீஸ்வரடு’ மற்றும் ‘ஹரஹர மஹாதேவா’ என தலைப்பு பரிசீலனை நடக்கும் பால கிருஷ்ணா படத்தை கோபால் இயக்குகிறார்.

ராம், ஹன்சிகா நடிக்கும் ‘கந்திரீகா’வில் தனிப்பாடலுக்கு ஆடியுள்ளார் ஸ்ரேயா.

‘நேனு நா ராக்ஷசி’யில் இரு விதமான வித்தியாச கேரக்டர்களில் நடித்துள்ளாராம் இலியானா.

ரவிதேஜாவின் ‘வீரா’ படத்துக்காக மொரீஷியஸ், ஐரோப்பா என அடுத்தடுத்த நாட்கள் பிளைட்டில் போய் நடிக்கிறார் டாப்ஸி.

நாகார்ஜுனாவுக்கு பல அதிரடி பக்திப் படங்கள் இயக்கிய கே.ராகவேந்திரராவ் விரைவில் ‘சாய்பாபா’ பற்றிய படத்தையும் அறிவிக்கிறார்.

சாய்குமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ‘தெலுகம்மாயி’ ஹீரோயின் கதையாம்.

‘ராஜ்’ பட தோல்விக்கு முழு காரணம் இயக்குநர் வி.என்.ஆதித்யாதான் என அர்ச்சனை செய்துள்ளார் விமலாராமன்.

ராம்& சமந்தா ஜோடியாகியுள்ள கௌதம் மேனன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் பெரிய பிஸினஸ் பேசப்படுகிறதாம்.

‘ஹாப்பிடேஸ்’, ‘லீடர்’ படங்களுக்குப் பிறகு புதுமுகங்களின் ‘லைப் ஈஸ் பியூட்டிபுல்’ படத்தை முடித்துள்ளார் ஷேகர் கம்முலா.

சிரஞ்சீவி தம்பியான பவனின் ‘தீன்மார்’ படம் ஒரே நாளில் 9 கோடியே 40 லட்சம் வசூல் பண்ணியுள்ளது.

லஷ்மி கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ‘அனநாக ஓ தீருடு’ பிளாப் ஆனதால் இளைய ராஜா இசையமைக்கும் ‘குன்டெலோ கோடரி’ யை பெரிதாக எதிர்பார்க்கிறாராம்.
 கிரி