இடம் கொடுத்தார் நடிகை புகுந்து விளையாடினார் நடிகர்



விவேக் ஹீரோ, சோனியா அகர்வால் ஹீரோயின். அவர் சங்கோஜப்படுகிறார். இவர் சந்தோஷப்படுகிறார். அதாவது, ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் இருவரும் ஜோடி. ஒரு காட்சியில் சோனியாவின் இடுப்பை விவேக் செல்லமாகக் கிள்ள வேண்டும். விவேக் தயங்கினார்.

இதைப் புரிந்துகொண்ட சோனியா, ‘சார்... இது நடிப்புதானே. சும்மா கூச்சப்படாம கிள்ளுங்க’ என்று கிரீன் சிக்னல் கொடுக்க, அடுத்த விநாடி விவேக் புகுந்து விளையாடி விட்டாராம். ‘காமெடி நடிகர்கள் கூட ஜோடி சேர்ந்து நடிக்க எத்தனையோ நடிகைகள் தயக்கம் காட்டும் நேரத்தில், சோனியாவின் பெருந்தன்மை யாருக்கும் வராது’ என்று உருகுகிறார் விவேக்.

நாளுக்கு நாள் கிசுகிசுக்கள் அதிகரித்து வருவதால் டென்ஷனாகி விட்ட நயன்தாரா, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லையாம். கேரவனில் இருந்து வருவாராம், டைரக்டர் சொல்வது போல் நடிப்பாராம். பிறகு அதே கேரவனில் அடைக்கலமாகி விடுவாராம். தன் உதவியாளர்கள் மற்றும் உதவி இயக்குனர்களிடம் கூட சகஜமாகப் பேசுவதில்லை என்கிறார்கள்.

படத்தில் நடிக்கிறாரே தவிர, அந்தப் படம் ரிலீசானால் பார்ப்பது கூட இல்லையாம். இதே பாணியைத்தான் பல முன்னணி நடிகைகளும் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் படத்தை அவர்களே பார்ப்பது இல்லை.