6 வயதில் அரிதாரம்!



ஆறுவயதிலேயே அரிதாரம் பூசி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் புஷ்மினி. சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோகிலா எங்கே போகிறாள்’, ‘கனவுகள் மெய்ப்பட’ ஆகியவை இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.

விஸ்காம் படித்திருக்கும் இவரை ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனின் அப்பாவாக நடித்த ரவி, இயக்குனர் தளபதியிடம் அறிமுகப்படுத்தினார். ‘தவமின்றி கிடைத்த வரமே’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

நாயகனின் தங்கையாக நடித்தார். அடுத்து ‘ஹாக்கி’ படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பிளஸ் டூ மாணவி வேடம் கிடைத்தது.‘கிருமி’ படத்தில் நாயகனின் காதலிஎன புஷ்மினியின் படவுலக வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து வருகிறது.குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துப் பெயர் வாங்க வேண்டும் என்பது இவரது லட்சியம்.