அனுஷ்கா ஆஸ்திரேலியா போகலை!



கேத்ரினா கைஃபுடன் காதல் முறிந்த கையோடு நர்கீசுடன் நெருங்கிப் பழகி வருகிறார் ரன்பீர் கபூர். கடந்த ஆண்டு தனது ‘பேபி’ படம் நன்றாக ஓடியிருந்தும், நல்ல விமர்சனங்கள் வந்தும் யாரும் அதற்கு விருதே தரவில்லை என வருந்துகிறார் அக்‌ஷய்குமார். ‘பாஜிராவ் மஸ்தானி’ படம் பார்த்து அசந்த அமிதாப் பச்சன், அப்படக் குழுவை அழைத்து வீட்டில் விருந்து பரிமாறியிருக்கிறார்.

சல்மான்கானுடன் ‘சுல்தான்’ ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் காதலன் விராட் கோஹ்லியின் ஆட்டத்தைப் பார்க்க ஆஸ்திரேலியா போகவில்லையாம் அனுஷ்காசர்மா.சஞ்சய் குப்தா இயக்கும் படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன். இதில் அவருக்கு ஜோடியே இல்லையாம்.

- ஜியா