கிளுகிளு வேலைக்கு ஆகலை!



அஜய் தேவ்கனின் ‘ஷிவே’ படம், வட இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இப்படத்தை அவரே இயக்குகிறார். கரண் ஜோஹர் இயக்கும் ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் கள்ளக்காதலனாக நடிக்கிறார் ரன்பீர் கபூர். சன்னி லியோனின் கிளு கிளு காட்சிகளை மட்டும் நம்பி வெளியான ‘மஸ்திஸாதே’ எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை ஹிரித்திக்குடன் காதல் முறிவு முடிந்துபோன விஷயம் என கங்கனா கூற, கடுப்பாகி விட்டாராம் ஹிரித்திக். அவருடன் காதலே இல்லை என பதிலுக்கு டுவிட்டரில் எழுதியுள்ளார்.

மகன் கரண் தியோல் அறிமுகமாகும் படத்தை தானே இயக்க உள்ளார் சன்னி தியோல். தாத்தா தர்மேந்திரா இப்படத்தை தயாரிக்கிறார்.

- ஜியா