ரீடர்ஸ் கிளாப்ஸ்!



சும்மா எகிறுது சார்!

பொங்கலுக்கு வந்த நான்கு படங்களின் விமர்சனத்தையும் நேர்மையாக முன்வைத்த ஒரே இதழ் ‘வண்ணத்திரை’ மட்டும்தான்.
- தமிழ்ச்செல்வன், திண்டுக்கல்.

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் சூர்யா படம் குறித்து பாராட்டி பேசி மாதவனை அழவைத்த செய்தி நெகிழ்ச்சியாக இருந்தது. இப்போது படம் வெளியாகி, மகத்தான வெற்றி பெற்று மாதவனை மீண்டும் முன்னணி ஹீரோவாக வலம் வர வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மெய்வருத்தம் தகுந்த கூலி தரும்.
- தேவிப்ரியா, அரசூர்.

நடுப்பக்க ராய்லட்சுமியின் படமும், அதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஆங்கிலத் தலைப்பும் சிம்ப்ளி சூப்பர்ப்!
- ரஞ்சன், மயிலம்.


ஸ்ரீதிவ்யாவுக்கு காதலிக்கும் ஐடியாவே இல்லை என்று கேட்டதிலிருந்து எங்கள் ஊரில் ஒருவருக்கும் தூக்கம் இல்லை. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா!
- சரண், மயிலாடுதுறை.

தெலுங்கில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ‘பொம்மரிலு’ பாஸ்கர் தமிழர்தான் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டது. நம்முடைய திறமையை எல்லாம் அண்டை அயல் மாநிலங்களுக்குத்தான் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம்.
- குணசேகர், நெய்வேலி.

பின்னட்டையில் வரலட்சுமியின் அலட்சிய போஸும், தலைப்பும் சும்மா எகிறுது சார்.
- ரமேஷ், நாமக்கல்.

‘ஆபாசம் என் விருப்பம்’ என்று பிரியங்கா தடாலடியாக சொல்லியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அம்மணியை மீண்டும் தமிழுக்கு யாராவது டவுன்லோடு செய்தால் புண்ணியமாகப் போகும்.
- சச்சின் சந்தோஷ், திருநெல்வேலி.