மர்மப் பிரதேசம்!
சரோஜா தேவி பதில்கள்
* ஆசைப்பட்டது கிடைப்பதில்லையே? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
எது கிடைக்குமோ அதன் மீது ஆசை வையுங்கள். * சரோஜாவை நேரில் பார்க்க முடியுமா? சும்மா பேசத்தான். - சங்கீதசரவணன், மயிலாடுதுறை.
பேசுறதுக்கு எதுக்கு நேரில் பார்க்கணும்? வேற விஷயம்னா சொல்லி அனுப்புங்க. * மர்மம் என்கிற சொல்லுக்கே அர்த்தம் மாறிவிட்டதே? - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆமாம். யாருக்கும் தெரியாத இடத்தை ‘மர்மப் பிரதேசம்’ என்று நல்ல அர்த்தத்தில் எழுதினாலே, அதை ஆபாசப் பொருளில் புரிந்துகொள்கிறார்கள். * மனைவி ஒரு மந்திரியா? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
இல்லை. கணவனுக்கு எப்போது பூஜை செய்ய வேண்டும் என்று தெரிந்த மந்திரவாதி. * பிரணிதாவை படங்களில் காணவில்லையே? - ப.முரளி, சேலம்.
இந்தப் படத்தைப் பார்த்து தற்காலிகமா ‘கூல்’ ஆகிக்கோங்க...
|